விலை கொடுத்து வாங்க முடியாத கனிமம் இந்தக் கீரையில்... இப்படி செஞ்சு சாப்பிடுங்க: டாக்டர் சிவராமன்
“கீரை வகைகளைப் பார்த்தால் ரொம்ப சாதாரணமாகத் தோன்றும், ஆனால், ஒவ்வொரு கீரையிலும் இருக்கக்கூடிய கனிமங்களை நீங்கள் விலை கொடுத்து வாங்க முடியாது” என்று அறிவுறுத்தும் டாக்டர் சிவராமன், மிகவும் எளிதாகக் கிடைக்கும் முருங்கை கீரையை சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்.

கீரை வகைகளைப் பார்த்தால் ரொம்ப சாதாரணமாகத் தோன்றும், ஆனால், ஒவ்வொரு கீரையிலும் இருக்கக்கூடிய கனிமங்களை நீங்கள் விலை கொடுத்து வாங்க முடியாது நண்பர்களே என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார்.
“கீரை வகைகளைப் பார்த்தால் ரொம்ப சாதாரணமாகத் தோன்றும், ஆனால், ஒவ்வொரு கீரையிலும் இருக்கக்கூடிய கனிமங்களை நீங்கள் விலை கொடுத்து வாங்க முடியாது” என்று அறிவுறுத்தும் டாக்டர் சிவராமன், மிகவும் எளிதாகக் கிடைக்கும் முருங்கை கீரையை சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்.
Advertisment
டாக்டர் சிவராமன் கூறுகையில், “கீரை வகைகளைப் பார்த்தால் ரொம்ப சாதாரணமாகத் தோன்றும், ஆனால், ஒவ்வொரு கீரையிலும் இருக்கக்கூடிய கனிமங்களை நீங்கள் விலை கொடுத்து வாங்க முடியாது நண்பர்களே.
முருங்கைக் கீரை இருப்பதிலே விலை குறைவாக இருக்கக்கூடிய கீரை. அது எவ்வளவு சத்துக்களை வைத்திருக்கிறது. உலகம் முழுக்க மொரிங்கா, மொரிங்கா என்று விற்றுக்கொண்டிருக்கிறார்கள். மொரிங்கா மாத்திரை பெரிய அளவில் ஏற்றுமதியாகிறது. மேட்டுப்பாளையத்தில் 80-90 ஏக்கர் நிலத்தில் வெறும் முருங்கை கீரையை ஸ்பிரே ட்ரை பவுடர் பண்ணி, மாத்திரையாக செய்து ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், நாம் வீட்டில் முருங்கை கீரை சாப்பிடுவதற்கு வலிக்கிறது.
தினம் தினம் நம்முடைய உணவில், கீரைகளும், காய்கறிகளும், பழங்களும் இருந்துகொண்டே இருக்க வேண்டும்” என்று டாக்டர் கு. சிவராமன் வலியுறுத்துகிறார்.
Advertisment
Advertisements
இவ்வளவு நன்மைகள் கொண்ட முருங்கை கீரையை இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள்:
வித்தியாசமான முறையில் வி.எஸ்.என் கிச்சன் (@vsnkitchen) யூடியூப் சேனலில் முருங்கை கீரை சாம்பார் செய்து காட்டியுள்ளனர். அதன்படி, முருங்கை கீரையை எப்படி செய்வது என்று இங்கே பார்ப்போம்.
முதலில் ஒரு மூடி தேங்காயை மேல் தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள், அதனுடன் 1 டீஸ்பூன் மிளகு, சீரகம் போடுங்கள், இவற்றுடன் 4 காய்ந்த மிளகாய் போட்டு மிக்ஸியில் அரைத்துக்கொளளுங்கள்.
அடுத்து, ஸ்டவ்வைப் பற்ற வைத்து, ஒரு வானலியை வைத்து, எண்ணெய் ஊற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும், சிறிது கடுகு போடுங்கள், பொரிந்ததும், 2 காய்ந்த மிளகாய் துண்டுகளாகக் கிள்ளி போடுங்கள். சின்ன வெங்காயம் 20 போடுங்கள், 10 பல்லு பூண்டு நறுக்கி போடுங்கள், கருவேப்பிலையைப் போட்டு நன்றாக வதக்குங்கள். அதனுடன், அரைத்து வைத்துள்ள தேங்காய், மிளகு பேஸ்ட்டைப் போடுங்கள். தேவையான அளவு உப்பு போடுங்கள். சிறிது தண்ணீர் ஊற்றி கலக்குங்கள்.
அதே நேரத்தில், மற்றொரு வானலியில் துவரம்பருப்பு 1 டீஸ்பூன், 1 டீச்பூன் அரிசி போட்டு லேசாக வறுத்து அதை மிக்ஸியில் அரைத்து சேர்த்துக்கொள்ளுங்கள். பின்னர் அதில், முருங்கை கீரையை போட்டு தண்ணீர் ஊற்றுங்கள், 100 கிராம் துவரம் பருப்பு வேகவைத்து மசித்து போடுங்கள். மஞ்சள் தூள் 2 சிட்டிகைப் போடுங்கள். நன்றாகக் கலக்கி விடுங்கள். ஒரு டீஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றுங்கள். நன்றாகக் கொதித்து கீரை வெந்தவுடன் இறக்கிவிடுங்கள். அவ்வளவுதான் வித்தியாசமான முருங்கை கீரை சாம்பார் தயார்.