/indian-express-tamil/media/media_files/2025/03/25/MTqFzaiTJlHhE8IgtxjZ.jpg)
உடல் மெலிந்து ஒல்லியாக இருக்கிற குழந்தைகள், மாதவிடாய் சுழற்சி முடியும் சமயத்தில் இருக்கிற பெண்கள் காலையில் இந்த கஞ்சி குடியுங்கள் என்று டாக்டர் சிவராமன் பரிந்துரைக்கிறார்.
உடல் மெலிந்து ஒல்லியாக இருக்கிற குழந்தைகள், மாதவிடாய் சுழற்சி முடியும் சமயத்தில் இருக்கிற பெண்களுக்கு கண்டிப்பாக கூடுதல் கால்சியம் தேவை, பாலுக்கு இணையான கால்சியம் இந்த உணவில் இருக்கிறது, அவர்கள் காலையில் இந்த கஞ்சி குடியுங்கள் என்று டாக்டர் சிவராமன் பரிந்துரைக்கிறார்.
ஒரு குழந்தை உடல் மெலிந்து ஒல்லியாக இருக்கிறது, பிற உணவுகளை உட்கிரகிக்ககூடிய உடல்நலம் இல்லை, ஒரு பெண் மாதவிடாய் சுழற்சி முடியும் சமயத்தில் இருக்கிறார் என்றால் அவர்களுக்கு கண்டிப்பாக கூடுதல் கால்சியம் தேவை, பாலுக்கு இணையான கால்சியம் இந்த உணவில் இருக்கிறது, அவர்கள் காலையில் இந்த கஞ்சி குடியுங்கள் என்று டாக்டர் சிவராமன் பரிந்துரைக்கிறார்.
பாலுக்கு இணையான கால்சியம் இந்த கஞ்சியில் இருக்கிறது என்று ஹெல்தி தமிழ்நாடு யூடியூப் சேனலில் டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.
டாக்டர் சிவராமன் கூறியிருப்பதாவது: “பல வீடுகளில் என்ன நினைப்பார்கள் என்றால், ரொம்ப சாதாரணமாக கூறும் வார்த்தை என்னவென்றால், சாப்பாடு சாப்பிடவில்லை என்றால், இந்த ஒரு டம்ப்ளர் பாலாவது குடித்துவிட்டுப் போ என்பார்கள். நீ சாப்பிடுவதற்கு நேரம் ஆகும், 8 மணிக்கு வண்டி வந்துவிடும். வேகமாக போக வேண்டும் என்றால் நீ ஒரு டம்பளர் பாலாவது குடித்துவிட்டுப் போ என்பார்கள். பால் நல்லதா? பால் கண்டிப்பாக குடிக்கணுமா? 7 வயது பையனுக்கு பால் தேவையா? இது எல்லோருக்குள்ளும் ஒரு சந்தேகம் ஓடிக்கொண்டே இருக்கிறது. பால் குடிக்கணுமா வேண்டாமா சார் என்றால், பால் ஒரு சிறந்த ஊட்ட உணவு அதில் சந்தேகம் இல்லை. நிச்சயம் அது ஊட்ட உணவு. ஆனால், அது தினசரி உணவா, எல்லோருக்குமான உணவா என்பதில்தான் கேள்வியே இருக்கிறது.
ஒரு குழந்தை உடல் மெலிந்து ஒல்லியாக இருக்கிறது, ஊட்ட உணவு இல்லாமல் இருக்கிறது, பிற உணவுகளை உட்கிரகிக்ககூடிய நிலையில் உடல் நலம் இல்லை. ஒரு பெண் மாதவிடாய் சுழற்சி முடியும் சமயத்தில் இருக்கிறார், அவர்களுக்கு கால்சியம் குறைந்து, ஆஸ்ட்ரியோபீனியா அல்லது ஆஸ்ட்ரியோபொரோசிஸ் இருக்கிறது. அவர்களுக்கு கண்டிப்பாக கூடுதல் கால்சியம் தேவை, அவர்களுக்கு பால் தேவைப்படலாம். பிற உணவில் இருந்து கால்சியம் கிடைக்கவில்லை. பிற உணவில் இருந்து ஊட்டம் குறைவாகத்தான் கிடைக்கிறதுதான் என்றால் அவர்கள் பால் எடுத்துக்கொள்ளலாம். எல்லோரும் தினமும் குடங்குடமாக பால் குடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
சில பேர் நம்ம வீட்டுப் பையன் நல்ல வரணுமா, நம்ம வீட்டுப் பையன் நல்ல உசேன் போல்ட் மாதிரி உயரமா வரணுமா உடனே டின் டின்னா காம்ப்ளான் வாங்கி பாலில் கலந்து தலையில் ஊற்றிக் குளி இல்லை குடித்துக்கொள் என்று வீட்டில் வாங்கி கொடுக்கிறார்கள். அப்பாவும் அம்மாவும் அகஸ்தியர் மாதிரி இருந்தால் புள்ளை எப்படி உசேன் போல்ட் மாதிரி வரும். வாய்ப்பே இல்லை.
குழந்தைகள் வளரணும், ஓடணும். தாய் தந்தையைப் பொறுத்து, அவருடைய தகப்பனைப் பொறுத்து, அவனுடைய தாய்மாமனைப் பொறுத்து அவனுடைய உயரம் வரும் அவ்வளவுதான். சரியான ஊட்டச்சத்து இருந்தால், சரியாக மரபுரீதியாக என்ன உயரம் என்ன இருக்கோ அது கிடைக்கும். அதை விட்டுவிட்டு, இந்த மாதிரி டப்பா டப்பாவாக 400-500 ரூபாய்க்கு வாங்கி கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
குழந்தைக்கு காலையில் நல்ல சத்துமாவு கஞ்சி கொடுங்கள். குறிப்பாக, கேழ்வரகு கஞ்சி கொடுங்கள். குழந்தையாக இருந்தால், கேழ்வரகு கஞ்சியில் அவ்வளவு இரும்புச் சத்து இருக்கிறது. கேழ்வரகு கஞ்சியில் அவ்வளவு கால்சியம் இருக்கிறது.
கேழ்வரகு கஞ்சியில் கிளைசெமிக் இண்டெக்ஸ் கொஞ்சம் கூட உள்ளது. ரத்தத்தில் வேகமாக சர்க்கரையைக் கூட்டக்கூடியது. அதனால்தான், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கேழ்வரகு கஞ்சி குடிக்காதீர்கள் என்கிறோம். வளரும் குந்தைகள், மெலிந்து இருக்கும் பிள்ளைகள், மாதவிடாய் சுழற்சி முடியும் சமயத்தில் இருக்கும் பெண்கள் இவர்களுக்கு ராகி கஞ்சி கொடுக்கலாம். தினமும் ராகி மால்ட், ராகி கஞ்சி ஏதாவது கொடுத்துக்கொண்டே இருங்கள். எல்லா சிறுதானியத்துடனும் கொடுக்கிறோம் என்கிறார்கள், அதை சில நேரம் கொடுங்கள். ஒல்லியாக இருக்கிற குழந்தையா அதற்கு ராகி கஞ்சி கொடுக்கலாம்.” என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us