/indian-express-tamil/media/media_files/2025/03/21/ZzGhJVzgEZoCqEaVsQoW.jpg)
காலையில் எழுந்ததும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும், எப்போது தண்ணீர் குடிக்கக் கூடாது, எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார். Image Screengrab from YouTube @Healthy TamilNadu
பொதுவாக ஒரு நாளைக்கு 3-3 1/2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பலரும் ஆலோசனை கூறுவார்கள். ஆனால், அந்த தண்ணீரை ஒரே நேரத்தில் 1 லிட்டர் 2 லிட்டர் என்று குடிக்கக்கூடாது என்று எச்சரிக்கும் மருத்துவர் கு. சிவராமன், காலையில் எழுந்ததும் இவ்ளோ தண்ணீர் போதும்; ஆனால், தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார்.
காலையில் எழுந்ததும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும், எப்போது தண்ணீர் குடிக்கக் கூடாது, வேண்டும், எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது குறித்து ஹெல்தி தமிழ்நாடு யூடியூப் சேனலில் மருத்துவர் சிவராமன் பேசியுள்ளார்.
மருத்துவர் கு. சிவராமன் கூறியிருப்பதாவது: “முதலில் தண்ணீர் நமக்கு மிக மிக முக்கியமான விஷயம். ஒரு நாளைக்கு 3 - 3 1/2 லிட்டர் தண்ணீர் தேவை இருக்கும். அந்த தண்ணீரை சீராகப் பகிர்ந்து சாப்பிட வேண்டும். குறிப்பாக அதிகாலையில் எழுந்த உடனே, 2 குவளை தண்ணீர் குடிக்க வேண்டும். அந்த தண்ணீர் நம்முடைய அறையின் வெப்பநிலை எப்படி இருக்கிறதோ அந்த அளவில் இருக்கும் தண்ணீரைக் குடிக்க வேண்டும். இரவு படுக்கும்போது வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்க வேண்டும். இதுதான் வழக்கமாக சொன்ன விஷயம்.
எப்போதுமே நவீன அறிவியலின் கண்கொண்டு பார்க்க வேண்டும். நவீன அறிவியல் தவறான விஷயம் கிடையாது. நவீன அறிவியலில் புகுந்துள்ள வணிகம்தான் பிரச்னைக்குரியது.
நவீன அறிவியலோ விஞ்ஞானமோ ஒரு அரசாங்க விஷயமாக இருக்கிற பட்சத்தில், அது பல்வேறு வகைகளில் மனிதர்களுக்கு உதவி செய்யக்கூடிய விஷயம்.
வேகமாக மடமட வென்று 2 லிட்டர் தண்னீர் குடித்தால் அது கிட்னியை பாதிக்கும். 2 லிட்டர் தண்ணீர் குடிக்கும்போது படுவேகமாக அப்சர்வ் செய்துகொள்ளும், அது தாமதமாகப் போவதில்லை. இதனால், அது சிறுநீரகத்தில் போய் நிற்கும். அதனால், ஒரு பலூனுக்குள் நீங்கள் தண்ணீர் ஊற்றிவைத்தால் அது தளர்வாகிவிடும். அந்த மாதிரி, நிறைய தண்ணீர் குடித்தால் நம்முடைய உடலில் உள்ள ஃபில்டர் பகுதிகள் தொய்வாக இருக்கும். அதனால், நாம் 1 லிட்டர், 2 லிட்டர் தண்ணீரை ஒரே நேரத்தில் குடிப்பது நல்லது இல்லை.
அடுத்து உணவு உண்ணும்போது இடையில் குடியாதே, கடையில் மறவாதே என்பதுதான், உணவு சாப்பிடும்போது தண்ணீர் குடிக்ககூடாது என்று ஏன் சொல்கிறார்கள். சாப்பிடும்போது இடையில் குடித்தீர்கள் என்றால், அல்லது சாப்பிடுவதற்கு முன்னால் உடனடியாக குடித்தீர்கள் என்றால் உங்களுடைய கேஸ்ட்டிக் என்சைம்ஸ் டைலூட் (நீர்த்துப்போய்விடும்) ஆகிவிடும். பசியைப் பொறுத்து உங்களுடைய சீரண அமிலம் சுரந்து இருக்கும். பசியின்போது, இவ்வளவுதான் சாப்பிட வேண்டும் என்று மூளை திட்டம்போட்டு உருவாக்குகிறது.
அப்போது, நீங்கள் உருவாக்கிய விஷயத்தில் தண்ணீர் குடித்தால் அது டயலூட் ஆகிவிடும். உளவியல் நோய் இருப்பவர்கள் சாப்பிடும்போது இடையில் தண்ணீர் குடித்துக்கொண்டு இருப்பார்கள். அதனால், இடையில் தண்ணீர் குடிக்ககூடாதா என்றால், விக்கல் வந்தால் தண்ணீர் குடிக்க வேண்டும். அதனால், உணவு சாப்பிட்ட பிறகு, 25 நிமிடம் 40 நிமிடம் கழித்து தண்ணீர் குடிக்கலாம்.
அதனால், காலையில் எழுந்த உடனே பல் துலக்கிவிட்டு 2 குவளை தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிடும்போது, இடையில் தண்ணீர் குடிக்கக்கூடாது. விக்கல் ஏற்படால் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிட்ட பிறகு, 25 - 40 நிமிடம் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும்” என்று மருத்துவர் கு. சிவராமன் ஆலோசனை கூறுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.