சங்க இலக்கியத்தில் நீண்ட ஆயுளோடு இருப்பதற்காக தனக்கு கிடைத்த நெல்லிக் கனியை அவ்வையாருக்கு கொடுப்பார். அப்படி இலக்கியங்களில் கூட சிறப்பாக பேசப்பட்டது நெல்லிக்காய். இந்த நெல்லிக்காயை சிலர் ஊறுகாய் போட்டு சாப்பிடுகிறார்கள், அப்படி சாப்பிட்டால் அதன் குணத்தைக் கெடுத்துவிடும். அதற்கு பதிலாக, நெல்லிக்காயில் குண்டூசியால் துளை போட்டு... இப்படி சாப்பிட்டால் முழு பலன் கிடைக்கும் என்கிறார் மருத்துவர் சிவராமன்.
நமது பாரம்பரிய இயற்கை உணவுகளில் உள்ள நன்மைகள், மருத்துவ குணங்கள் ஆகியவற்றை அறிவியல் மொழியில் பேசி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் மருத்துவர் சிவராமன். நெல்லிக்காயை எப்படி சாபிட வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் கூறுவதை இங்கே பார்ப்போம்.
“நெல்லிக்காய் ஊறுகாய் என்று சொல்கிறார்கள், நெல்லிக்காயை ஊறுகாயாக சாப்பிடாதீர்கள், நெல்லிக்காய் ஊறுகாய் போட்டால் அதன் குணத்தைக் கெடுத்துவிடும். தேன் நெல்லிக்காய் என்று சொல்கிறார்கள். அதில் பலவும் சர்க்கரைப் பாகுவில் செய்யப்படுகிறது. நெல்லித் தேன் என்று சர்க்கரைப் பாகுவில் வேக வைத்துவிட்டு தேன் தடவி விற்கிறார்கள். அதனால், நீங்களே செய்து சாப்பிடுங்கள்.
நல்ல நெல்லிக்காய் வாங்கி அதில் குண்டூசியால் துளை துளையாகப் போட்டு ஒரு நாள் தேனில் ஊறவையுங்கள். ஒரு நாள் தேனில் இருந்தால் போதும். அதை ஒரு வாரம் வைத்திருந்தால் கெட்டுப்போகத்தான் செய்யும். ஏனென்றால், அதைப் பக்குவப்படுத்துவதற்காக ரசாயணங்களைச் சேர்ப்பதைவிட, அப்படியே சுவைத்து சாப்பிடலாம். தேனில் செய்து சாப்பிடலாம். நல்ல இருப்புச் சத்து உள்ளது” என்று மருத்துவர் சிவராமன் பரிந்துரை செய்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“