ஈரலில் ஒட்டி இருக்கும் கொழுப்பை கரைக்கும்... நம்ம வீட்டு கிச்சன்ல இருக்கு; டெய்லி இப்படி சாப்பிடுங்க: மருத்துவர் சிவராமன்!
உடலில் உள்ள ஈரலில் ஒட்டி இருக்கும் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது நம்ம வீட்டு கிச்சனில் இருக்கும் இந்த பொருள். இதை இப்படி தினமும் சாப்பிட்டால் கொழுப்பைக் கரைக்கும் என்று மருத்துவர் சிவமரான் கூறுகிறார்.
உடலில் உள்ள ஈரலில் ஒட்டி இருக்கும் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது நம்ம வீட்டு கிச்சனில் இருக்கும் இந்த பொருள். இதை இப்படி தினமும் சாப்பிட்டால் கொழுப்பைக் கரைக்கும் என்று மருத்துவர் சிவமரான் கூறுகிறார்.
உடலில் உள்ள ஈரலில் ஒட்டி இருக்கும் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது நம்ம வீட்டு கிச்சனில் இருக்கும் இந்த பொருள். அது என்ன பொருள், அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பது குறித்து ஹெல்த் பேஸ்கெட் யூடியூப் சேனலில் மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
உடலில் உள்ள ஈரலில் ஒட்டி இருக்கும் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது நம்ம வீட்டு கிச்சனில் இருக்கும் இந்த பொருள். இதை இப்படி தினமும் சாப்பிட்டால் கொழுப்பைக் கரைக்கும் என்று மருத்துவர் சிவமரான் கூறுகிறார்.
Advertisment
உடலில் உள்ள ஈரலில் ஒட்டி இருக்கும் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது நம்ம வீட்டு கிச்சனில் இருக்கும் இந்த பொருள். அது என்ன பொருள், அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பது குறித்து ஹெல்த் பேஸ்கெட் யூடியூப் சேனலில் மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
வெந்தயத்தின் மருத்துவ குணம் குறித்து மருத்துவர் சிவராமன் கூறுகிறார்: வெந்தயம் முன்னாடி என்ன நினைத்தார்கள் என்றால் அது ஒரு நல்ல மனமூட்டி என்று நினைத்தார்கள். இதில் நிறைய நார் பொருட்கள் இருக்கிறது, இதை சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது என்றார்கள். சீன மருத்துவத்தில் வெந்தயம் காமத்தை உருவாக்கக்கூடிய ஒரு பொருள், அதனால், அதை ஆண்மைப் பெருக்கியாககப் பயன்படுத்துகிறார்கள். அதனால், அது ஒரு காம உணர்வைத் தூண்டக்கூடிய (aphrodisiac) பொருளாக பயன்பட்டு வந்தது.
Advertisment
Advertisements
அதற்கு பிறகு, வெந்தயத்தில் என்ன கண்டுபிடித்தார்கள் என்றால் அதில் நிறைய ஃபைபர் இருக்கிறது. அதிலும் குறிப்பாக கரையும் நார்கள் (Soluble fiber) இருக்கிறது. அது ரத்தத்தில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் என்று சொல்கிறார்கள். ஒவ்வொன்றையும் ஆய்ந்து ஆய்ந்து பார்க்கும்போது, வெந்தயம் மாதிரி ஒரு அற்புதமான பொருள் வேறு எதுவும் கிடையாது. இப்போது நாம் சொன்ன அத்தனை விஷயங்களும் வெந்தயத்தில் இருக்கிறது. குறிப்பாக ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைப்பதற்கும் ஈரலில் மேலே படிந்திருக்கும் கொழுப்பைக் கரைப்பதற்கும் வெந்தயம் அவ்வளவு நன்றாகப் பயன்படும்.
வெந்தயத்தின் கரையும் நார்கள் இந்த கொழுப்பைக் கரைப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது என்று பல நாடுகளில் ஆய்வுகளை நடத்தி சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அதை நாம் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த வெந்தயம் விஷயத்தில் ரொம்ப முக்கியமாக சொல்ல வேண்டியது என்னவென்றால், பலரும் நான் வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிடுகிறேன் என்கிறார்கள். அதாவது இரவு 1 ஸ்பூன் வெந்தயம் ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை குடிக்கிறேன், ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிடுகிறேன் என்கிறார்கள். ஊற வைத்து சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சி் தரும். ஆனால், இப்படி வெந்தயத்தை ஊற வைப்பதால் அதில் உள்ள கரையும் நார்களின் செயின் உடைகிறது. அதனால், சர்க்கரை நோயாளிகள் வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த பயனும் இல்லை.
அதனால், வெந்தயத்தை அப்படியே சவைத்து சாப்பிட்டால்தான் பயன் கிடைக்கும். அல்லது வெந்தயத்தை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு சாப்பிட வேண்டும்.” என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.