மார்பக கேன்சரை விரட்டும் மீன்... டெய்லி கூட சாப்பிடலாம்: அடித்துச் சொல்லும் டாக்டர் சிவராமன்
மார்பக கேன்சரை விரட்டும் மீன் உணவை தினமும் கூட சாப்பிடலாம், மீன் உணவில் கோவிட், ஸ்வைன் ஃபுளு போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் எதிர்ப்பாற்றல் உள்ளது என்று மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
மார்பக கேன்சரை விரட்டும் மீன் உணவை தினமும் கூட சாப்பிடலாம், மீன் உணவில் கோவிட், ஸ்வைன் ஃபுளு போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் எதிர்ப்பாற்றல் உள்ளது என்று மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
நோய்கள் வரமால் தடுக்க நம்முடைய உணவுகளில் அக்கறை செலுத்த வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
மார்பக கேன்சரை விரட்டும் மீன் உணவை தினமும் கூட சாப்பிடலாம், மீன் உணவில் கோவிட், ஸ்வைன் ஃபுளு போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் எதிர்ப்பாற்றல் உள்ளது என்று மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
Advertisment
நோய்கள் வரமால் தடுக்க நம்முடைய உணவுகளில் அக்கறை செலுத்த வேண்டும் என்று Tamil Speech Box யூடியூப் சேனலில் மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
மருத்துவர் சிவராமன் நாம் எல்லாம் சினிமாவில் காட்டுகிறார்கள் ரொம்ப நல்லது என்று நினைக்கிறோம். ஆனால், 30 வயதிலேயே சர்க்கரை நோய் வருவதற்கு காரணம், வெள்ளைச் சர்க்கரைக்கு அடுத்து பரோட்டாதான் காரணம். அதனால், 4 பரோட்டாவைப் பிச்சிப் போட்டு சலசலவென சால்னா ஊற்றி சாப்பிடலாம் என நினைக்க வேண்டாம். ஏனென்றால், பரோட்டா செய்வதற்கு பயன்படுத்தப்படும் மைதா மாவு, இன்சுலி சுரக்கும் கணையத்தில் உள்ள ஐலெட்ஸ் செல்களை பாதிக்கும் தன்மை உள்ளது என்று மருத்துவர் சிவராமன் எச்சரிக்கிறார்.
பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் சுழற்சியில் பல சிக்கல்கள் இப்போது வர ஆரம்பித்திருக்கிறது. சினைப்பை நீர்க்கட்டிகள், பி.சி.ஓ.டி என்று சொல்வார்கள். மாதவிடாய் சுழற்சி சீரான முறையில் இல்லாமல் தள்ளிப்போவதற்கு காரணம், மைதா பொருட்கள் அதிகம் சாப்பிடுவதும் இனிப்பு பண்டங்கள் அதிகம் சாப்பிடுவதும் காரணம் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
Advertisment
Advertisements
திருமணமாகி 10 வருடங்கள் ஆகியும் சினைப்பை நீர்க்கட்டிகளால், குழந்தைப் பேறு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது. அதனால், பெண்கள் 15 வயதில் இருந்து மைதா, வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார்.
நாங்கள் படிக்கிறபோது பெண்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்றுநோய் வயதான பெண்களில், இளம் வயதில் திருமணமான பின் பாலூட்டுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போன பெண்களுக்கு, இல்லையென்றால் திருமணமே செய்துகொள்ளாமல் போனவர்களுக்கு அந்த முதிய பெண்களுக்குதான் மார்பக புற்றுநோய் வரும் என்று நாங்கள் படித்திருக்கிறோம். ஆனால், இன்றைக்கு நிலை என்ன தெரியுமா? என் மருத்துவமனைக்கு வந்த 24 வயதான ஒரு பெண், 7 மாதம் வயிற்றில் குழந்தையை வைத்துள்ளார், அந்தப் பெண்ணின் மார்பகத்தில் கட்டி வீங்கியிருக்கிறது. சாதாரணமாக குழந்தைப் பெறுவதற்கு முன்னாடி, பால் கொடுப்பதற்கு பால் கோளங்களில் கொஞ்சம் வீக்கம் வரும். ஆனால், ரொம்ப பெரியதாகவும் அந்த தாய் வலியுடன் அழுகிறார். அந்த பெண் பயப்படுகிறார். அவரைப் பார்த்த மகளிர் மருத்துவர் எதற்கும் ஒரு ஸ்கேன் பண்ணுவோம் என்று ஸ்கேன் செய்கிறார். அதில், புற்றுநோய்க் கட்டிகளுக்கு முந்தைய நிலை என்று தெரிகிறது. அந்த பெண் அழுகிறார். இப்படி மார்பக புற்றுநோய் வருவதற்கு காரணம் நம்முடைய உணவில் நச்சுப் பொருட்கள் கூடிக்கொண்டே போனதுதான் காரணம்.
இப்படியான சிக்கல்களுக்குள்ளே போகாமல் இருக்க வேண்டும் என்றால் நாம் உணவில் அக்கறையாக இருக்க வேண்டும். தினம் ஒரு பழங்கள் சாப்பிடுங்கள், வாழைப்பழம், கொய்யாப்பழம், பப்பாளி, மாதுளை என ஏதாவது ஒரு பழம் சாப்பிடுங்கள்.
நீங்கள் புலால் உணவு சாப்பிடுபவராக இருந்தால், மீன்கள்தான் மிகச்சிறப்பு. நீங்கள் மீன் கிடைக்கக்கூடிய மாவட்டத்தில் இருக்கிறீர்கள் என்றால் தினமும்கூட மீன் சாப்பிடலாம். முட்டை சாப்பிடுங்கள், மீன் சாப்பிடுங்கள், புரதச்சத்து ரொம்ப ரொம்ப அடிப்படை. அத்தனை நோய்க்குமான எதிர்ப்பு ஆற்றல் புரதங்களில் இருந்துதான் வருகிறது. அந்த புரதங்களில் அமினோ அமிலங்கள் என்று சொல்லக்கூடிய மிகச் சிறப்பான புரதங்கள் எல்லாம் மீன்களில் இருக்கிறது. புத்திசாலித்தனத்துக்கு உரிய விஷயங்கள் மீன்களில் இருக்கிறது. கோவிட், ஸ்வைன் ஃபுளு போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கான நோய் எதிர்ப்பு ஆற்றல் அந்த புரதத்தில் இருக்கிறது. உணவில் புரதங்கள் நிறைய வைத்துக்கொள்வோம். குப்பை உணவுகளான, பீஸா, பர்கர் போன்றவற்றில் இருந்து முழுமையாக வெளியேறுவோம்” என்று மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.