/indian-express-tamil/media/media_files/2025/03/23/AdNfyCpKN3aQz2EE2HJg.jpg)
குழந்தைகளுக்கும் சரி, நாள்பட்ட நோய்களுக்கு மருத்துவம் எடுப்பவர்களும் சரி, பாலூட்டக்கூடிய மகளிர்களும் சரி அவர்களுக்கு மீன்களை விட மிகச் சிறந்த உணவு வேறு இல்லை என்று சொல்லலாம் என்று மீன்களை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் கு. சிவராமன் பரிந்துரைக்கிறார்.
மீன் உணவுகளின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து தமிழ் ஸ்பீச் பாக்ஸ் யூடியூப் சேனலில் மருத்துவர் கு. சிவராமன் பேசியுள்ளார்.
மருத்துவ கு. சிவராமன் மீன்களின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி கூறுகையில், “மருத்துவ குணம் உள்ள நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு உணவுதான் மீன்கள். இன்றைக்கு நிறைய ஆய்வுகளில் ஒவ்வொரு மீன்களைப் பற்றியும் கருத்துகள் நிறைய வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், நம்முடைய சங்க இலக்கிய காலங்களில் இருந்து எடுத்துக் கொண்டாலும் சரி, சித்த மருத்துவ இலக்கியங்களில் எடுத்துக் கொண்டாலும் சரி அல்லது பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் சரி, சித்த மருத்துவம், சீன மருத்துவம், ஆயுர்வேதம் உலகின் பல மருத்துவ முறைகள் எல்லாம் மீன்களைப் போற்றி இருக்கின்றன. எந்த மீன்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நிறைய கருத்து வேறுபாடுகள் இன்றைய நவீன அறிவியலோடு கொஞ்சம் முரண்படக்கூடிய விஷயங்கள் இருந்தாலும்கூட ஒட்டு மொத்தமாக மீன்கள் சிறப்பான உணவு என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் பாரம்பரிய மருத்துவத்தில் இல்லை.
அந்த அடிப்படையில், நாம் இன்றைக்கு நவீன அறிவியலில் மீன்களைப் பற்றி நிறைய படிக்கிறோம். குறிப்பாக சால்மன் மீன், டோனா மின் ஆகியவை பற்றி படிக்கிறோம். உலக அளவில் ஏகப்பட்ட ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார்கள்.
குழந்தைகள் புத்திசாலிகளாகவும் நோய் எதிர்ப்பு ஆற்றலுடன் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் நிறைய பேரின் ஆசை. பொதுவாக குழந்தைகள் புத்திசாலியாக வர மாதிரி நல்ல உணவை கொடுங்கள் என்று தான் கூறுவார்கள். சளி பிடிக்காத, நோய் எதிர்ப்பு ஆற்றலை ஊட்டுகிற உணவை கொடுங்கள் என்றுதான் நிறைய அறிவுரைகள் கூறுவார்கள். இந்த இரண்டையும் செய்யக்கூடிய ஒரு உணவு எது என்றால் அது மீன்கள்தான்.
பொதுவாக நம்முடைய நோய் எதிர்ப்பாற்றல் நன்றாக இருக்க வேண்டும் என்றால் நமக்கு நிறைய புரதச்சத்துள்ள உணவுகள் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். புரதம் தான் நம்முடைய உடலின் தசைப்பகுதியையும் வலுப்படுத்துவது. அதுதான் நம் உடலில் ஒரு தொற்று கிருமி உள்ளே வருகிறது என்றால் அல்லது ஒவ்வாமையை கொடுக்கக்கூடிய ரசாயன கூறு உள்ளே வருகிறது என்றால் அதை விளக்கக்கூடிய ஆற்றல், முழுமையாக எதிர்த்து நம்முடைய உடலை முழுமையாக மீட்டெடுக்கக்கூடிய தன்மை நம்முடைய உடலில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு அமைப்பு தான்.
அந்த நோய் எதிர்ப்பு அமைப்பை நாம் சாப்பிடக்கூடிய புரதங்களில் இருந்து எடுக்கக்கூடிய அமினோ அமிலங்கள் தான் கட்டமைத்துக் கொண்டு வருகிறது. அப்போது எந்தக் குழந்தை நல்ல புரத உணவுகளை எடுத்துக் கொண்டிருக்கிறதோ அந்த குழந்தைக்கு இயல்பாகவே வெளியிலிருந்து வரக்கூடிய சவால்களை எதிர்த்து நிற்பதற்கும், குறிப்பாக தொற்று கிருமிகளை எதிர்த்து நிற்கக்கூடிய தன்மை கிடைத்து விடும். அந்த அடிப்படையில், மீன்கள் புரதங்களுக்கான மிகச் சிறந்த தேர்வு என்று கூறலாம்.
வீகன் என்கிற மரக்கறி உணவுகளில் நிறைய புரதங்கள் இருக்கிறது. அதாவது, பாசிப்பருப்பு, கீரைகள், பருப்பு வகைகளில் புரதங்கள் மிகச் சிறப்பாக கருதப்படுகிறது. அதற்கு இணையான தன்மை மீன்களுக்கு இருக்கிறது. மரபு ரீதியாக நாம் பல நெடுங்காலமாக மீன்களை சாப்பிட்டு வரக்கூடிய மக்கள், அந்த வீட்டு குழந்தைகள் கண்டிப்பாக நாம் மீன்களை எடுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். நாம் அதை தவிர்க்க நினைத்தால் புரதங்கள் குறைவதற்கு வாய்ப்பு உண்டு. அதுமட்டுமில்லாமல் அந்த மீன்களை சாப்பிடும் போது இன்னொரு மிக முக்கியமான பயன் என்ன கிடைக்கிறது என்றால் இன்றைய அறிவியல் சொல்கிறது ஒமேகா-3, ஒமேகா 6 என்கிற கொழுப்பு அமிலங்கள் மீன்களில் இருந்து தான் கிடைக்கிறது.
இந்த ஒமேகா-3, ஒமேகா 6 பற்றி நடக்காத ஆராய்ச்சிகளை இல்லை என்று சொல்லலாம். பல நாள்பட்ட நோய்களில் உதாரணமாக சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு, புற்றுநோய் போன்ற நோய்களுக்கு நாம் மருத்துவம் எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அப்போது நமக்கு நிறைய ஆன்ட்டி ஆக்சிடென்ட் வேண்டும். நாள்பட்ட நோய்கள் எல்லாவற்றுக்குமே ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களில் இருந்து வரக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடென்ட் மிக மிக அவசியமாக இருக்கிறது.
சாதாரணமாக நம்முடைய சமையல் எண்ணெய்களில் இந்த ஒமேகா-3 மிக மிக குறைவான அளவில் தான் இருக்கும். குறிப்பாக நாம் கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் அதில் கிடைக்கும், செக்கில் ஆட்டிய நல்லெண்ணையில் கொஞ்சம் கிடைக்கும். ஆனால்,இன்றைக்கு இருக்கக்கூடிய சூழலில் அது கிடைப்பதற்கு மிக குறைவான நபர்கள் தான் இருப்பார்கள். அப்போது அதற்கு மாற்று என்று எடுத்துப் பார்த்தால் இந்த ஒமேகா 3, ஒமேகா 6 இருக்க கூடிய மீன்கள் தான்.
அதனால், இந்த மீன்களை நாம் அவ்வப்போது மாதத்திற்கு ஒரு மூன்று, நான்கு முறை எடுத்துக் கொண்டு வந்தோம் என்றால் அந்த ஒமேகா எண்ணெய்கள் நமக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும். அவை நோய் எதிர்ப்பாற்றலை வழங்குவதோடு ஏதாவது ஒரு நாள் பட்ட நோய்களுடைய ஆன்டி-ஆக்சிடென்ட் ஆதரவு தேவை என்கிற போது அதற்கும் நமக்கு இந்த மீன்கள் உதவியாக இருக்கும்.
அப்புறம், இந்த புலால் உணவுகளிலேயே குறைந்த அளவு கொழுப்பு இருப்பது மீன்கள் மட்டும் தான். அதாவது நாம் கொழுப்பை தவிர்க்க வேண்டிய சூழலில் அதாவது உடல் எடை அதிகமாக இருக்கிறது, ரத்த கொதிப்பினால் உடல் எடை அதிகமாக இருக்கிறது, மாரடைப்பு வருகிற மக்களாக இருக்கிறார்கள் என்கிறபோது புலால் உணவுகளில் மீன்கள் மிகச் சிறந்த ஒரு தேர்வு ஆக இருக்கும்.
இது மட்டுமல்ல, மீன்கள் குழந்தைகளுக்கு எந்த அளவுக்கு சிறந்த உணவாக இருக்கிறதோ அதே மாதிரி கர்ப்பிணி பெண்களுக்கும் பாலூட்டக்கூடிய தாய்மார்களுக்கும் மிக மிக அவசியமான உணவு மீன்கள். பாலூட்டக்கூடிய மகளிருக்கு அதிக புரதச்சத்து வேண்டும் அதே நேரத்தில் தாய்ப்பாலை அதிகமாக சுரக்க வைக்க கூடிய தன்மை மீன்களுக்கு உண்டு. அதிலும் குறிப்பாக சுறா புட்டு என்று சொல்வார்கள். சுறா மீன்களில் இருந்து செய்யக்கூடிய புட்டு அதாவது சுறா புட்டு என்றால் சுறா மீன்கள் உடைய சதைப்பகுதியை நன்றாக வேக வைத்து இடித்து கொடுக்கக்கூடிய பூட்டு மாதிரி அதாவது எப்படி ஒரு அரிசி மாவு எப்படி புட்டு இருக்கிறதோ அதே மாதிரி சுறா மீன் சமைத்த பிறகு மாறுவதால் அதற்கு சுறா புட்டு என்று பெயர். அந்த சுறா புட்டு ஒவ்வொரு பாலூட்டக்கூடிய தாய்மார்களுக்கும் வாரத்திற்கு இரண்டு நாள் மூன்று நாள் எடுத்துக் கொண்டு வரலாம்.
இது தவிர இன்னொரு விஷயம் கவனமாக வைத்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், இது எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டியதா என்றால் அதிகபட்ச புரதங்கள் நோய் எதிர்ப்பாற்றலை தூண்டுவதால் ஒரு சிலருக்கு ஒரு சில நோய்களுக்கு நல்லது இல்லை. அதனால் தான், பத்தியத்தில் சில இடங்களில் மீன்களை தவிர்க்க சொல்வார்கள் குறிப்பாக குறிப்பாக நமக்கு ஏதாவது கரப்பான் நோய் இருக்கிறது என்றால், ஒவ்வாமை காரணமாக ஒத்துக் கொள்ளாமல் தோள்களில் படைகள் இருக்கு, கருத்திட்டுகள் இருக்கிறது, அரிப்பு இருக்கிறது, அதோடு சேர்ந்து நீர் வருவது, செதில் செதிலாக உதிரக்கூடிய சொரியாசிஸ் நோய்கள் இருக்கும்போது நாம் மீன்களை தவிர்த்து விட வேண்டும். அதாவது சிலருக்கு திடீரென ஒவ்வாமை கொடுக்கக்கூடிய தன்மை மீன்களுக்கும் கடல் வாழ் உயிரினங்களுக்கும் உண்டு. அதனால், பொதுவாக ஒரு நல்ல சைனட்டீஇ இருக்கிறது இருக்கிறவர்கள் அல்லது திடீரென உடல் மீது தடிப்பு தடிப்பாக வரக்கூடியவர்கள் அதுவே ஒரு அரை மணி நேரத்தில் மழை கூடிய தன்மை இருக்கும் இதனால் ஒவ்வாமையினால் வரக்கூடிய கானாகடி அப்படி சொல்லக்கூடிய அஷிங்கேரியல் ரேஷ் இருப்பவர்கள் மீன்களை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது.
குறிப்பாக இறால் மீன் என்று சொல்லக்கூடிய பிரான்ஸ் அதிகமாக எடுக்க கூடாது. மீன்கள் சாப்பிட்ட 20 நிமிடங்களிலேயே உடல் எல்லாம் வீங்கி, மூச்சடைப்பு வந்து சில நேரங்களில் மிக தீவிர நிலைக்குகூட இந்த மீன்கள் அழைத்துச் செல்லும். அதனால், ஒவ்வாமை இருக்கிறவர்கள், ஆஸ்துமா நோயாளிகள் தோல் நோயாளிகள் அவர்கள் மீன்களை தவிர்த்து விடலாம்.
மற்ற எல்லோருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கும் சரி, நாள்பட்ட நோய்களுக்கு மருத்துவம் எடுப்பவர்களும் சரி, பாலூட்டக்கூடிய மகளிர்களும் சரி அவர்களுக்கு மீன்களை விட மிகச் சிறந்த உணவு வேறு இல்லை என்று சொல்லலாம். இன்றைக்கு நிறைய கார்ட் ஃபிஷ் லீவாராயில், ஷார்க் லிவர் ஆயில், கார்ட் பிஷ்-ல் இருந்து அதனுடைய லிவரிலிருந்து எல்லாம் எண்ணெயில் எடுத்து உலகெங்கும் ரொம்ப பிரபலமாக இருக்கிறது. விட்டமின் ஏ விற்காகவும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதற்காகவும் விற்கிறார்கள். அதையெல்லாம் விட நாம் அவ்வப்போது அன்றாட வாழ்க்கையில் நாம் நல்ல மீன்களை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால், நம்முடைய ஆரோக்கியம் மிகச் சிறந்த அளவில் இருக்கும்” என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.