இயற்கை உணவுகளில், பாரம்பரிய உணவுப் பொருட்களில் உள்ள சத்துகள், அதிலுள்ள ஆரோக்கிய நன்மைகளை அறிவியல் மொழியில் பேசி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் மருத்துவர் சிவராமன்.
பலருக்கும் தெரிந்த ஒரு சாதாரணமான உணவுப் பொருளில் உள்ள நன்மைகள் குறித்து நாம் இதுவரை அறிந்திராத பல தகவல்களைக் கூறி வியக்க வைக்கிறார். அந்த வகையில், புற்று நோயைத் தடுக்கும் நம்ம ஊர் பழம் ஒன்றைப் பற்றி மருத்துவர் சிவராமன் கூறுகிறார். அந்த பழம் திராட்சை பழம். ஆனால், அதில் விதை இல்லாத திராட்சை பழத்தை வாங்க வேண்டாம் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
மருத்துவர் சிவராமன் கூறுகிறார், “விதையில்லாத திராட்சை சாப்பிட்டால், விதையில்லாமல்தான் போய்விடுவான், கருப்பு பன்னீர் திராட்சை திண்டுக்கல்லில் இருந்து கிடைக்கிறது. அதில் புற்றுநோயை எதிர்க்கக் கூடிய சத்து அதில் இருக்கிறது.அதில் ரிசர்வட்டால் என்ற ஒன்று இருக்கிறது. இது புற்றுநோயைத் தடுக்கிறது. ஆனால், நாம் அதை தூர போட்டுவிட்டு, சீட்லெஸ் என்று விதை இல்லாத திராட்சையை வாங்கி சாப்பிடுகிறோம். விதையில்லாத திராட்சையை சாப்பிட்டால், விதையில்லாமதான் போயிருவான்” என்று கூறுகிறார்.
புற்றுநோயைத் தடுக்கும் சத்து உள்ள கருப்பு பன்னீர் திராட்சையை வாங்கி சாப்பிடுவோம். சீட்லெஸ் திராட்சையைத் தவிர்ப்போம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“