பால், ராகியை விட இந்தக் கீரை பெஸ்ட்: எலும்பை வலுவாக்க இதை சாப்பிடுங்க: மருத்துவர் சிவராமன்
எலும்பை வலுவாக்க கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். பால், ராகியைவிட இந்தக் கீரை பெஸ்ட், எலும்பை வலுவாக்க இதை சாப்பிடுங்கள் என்று மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார்.
எலும்பை வலுவாக்க என்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து மருத்துவர் சிவராமன் பேசியதை இங்கே தருகிறோம்.
சித்த மருத்துவம் குறித்தும் நம்முடைய பாரம்பரிய உணவுகளில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் குறித்தும் மருத்துவர் கு. சிவராமன் பேசி பரப்பி வருகிறார். ஹெல்தி தமிழ்நாடு என்ற யூடியூப் சேனலில் எலும்பை வலுவாக்க என்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து மருத்துவர் சிவராமன் பேசியதை இங்கே தருகிறோம்.
Advertisment
எலும்புகளை வலுவாக்க எந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் கு. சிவராமன் கூறியிருப்பதாவது:
நம்முடைய உடல் கட்டமைப்பைக் காட்டுவது எலும்புதான். நம்முடைய உடலில் மிக மிக முக்கியமனா உறுப்பு எலும்பு அதை ரொம்பரொம்ப பாதுகாப்பாக வைத்துகொள்ள வேண்டும்.
எலும்புகளையும் எலும்பு பொருத்துகளையும் வலுவாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். எலும்புகள் நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், கால்சியம் தேவை. கால்சியம் குறைந்தால், எலும்பின் வலு குறையும். பெண்களுக்கு மாதவிடாய் முடிகிற 49-50 வயதில் கால்சியம் குறைகிறது. அதனால், அவர்கள் கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும்.
Advertisment
Advertisements
வளரும் குழந்தைகள் ஒல்லியாக இருந்தால், கால் வளைகிறது என்றால் இது கால்சியம் குறைவினால் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதனால், எலும்புகள் வலுவாக இருக்க வேண்டுமானால் கால்சியம் தேவை. கால்சியம் எந்த உணவில் இருக்கும் என்றால், தரைக்கு அடியில் விளையக்கூடிய கிழங்குகளில் கொஞ்சம் சுண்ணாம்புச் சத்து அதிகமாக இருக்கும்.
பால், மோர் போன்றவை அதிக அளவில் கால்சியம் சத்து கொடுக்கக்கூடியவை. சர்க்கரை வியாதி உள்ளவர்கள், உடல் பருமனாக இருப்பவர்களுக்கு பால் வேண்டாம் என்றால், மோர் எடுத்துக்கொள்ளலாம்.
ஒரு டம்பளர் மோரில் கிட்டத்தட்ட 280 மி.கி கால்சியம் இருக்கிறது. வெயில் காலங்களில் நீர் மோராக எடுத்துக்க்கொள்ள வேண்டும்.
மிகப்பெரிய அளவில் கால்சியம் தரக்கூடிய ஒரு தானியம் கேழ்வரகு. இதை புட்டு, அடை, கஞ்சி, உருண்டை என செய்து சாப்பிடலாம்.
அதே போல கீரைகளில் கொஞ்சம் கொஞ்சம் கால்சியம் உள்ளது. ஆனால், அதிக கால்சியம் உள்ள எலும்பை வலுவாக்கக்கூடியது பிரண்டைக் கீரை. இந்த பிரண்டைக் கீரையை துவையலாக அரைத்து சாதத்தில் போட்டு சாப்பிடலாம். இந்த பிரண்டைக் கீரைக்கு தமிழில் இன்னொரு பெயர் வஜ்ஜிரவல்லி. வஜ்ஜிரம் என்றால் உறுதியாக இருப்பதைக் குறிக்கிறது. எலும்பை வலுவாக்க கால்சியம் நிறைந்த மோர், கேழ்வரகு, பிரண்டைக் கீரை எடுத்துக்கொள்ளலாம்.
அதே போல, இறைச்சி உணவுகளில் மீன், கருப்புக் கோழி இறைச்சி உணவை எடுத்துக்கொள்ளலாம். இந்த கடக்நாத் என்கிற கருப்புக்கோழி வகையின் இறைச்சி எலும்பையும் தசைகளையும் வலுவாக்கும் என்று சித்த மருத்துவத்தில் சொல்லியிருப்பதாக மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.