இந்தக் கீரை வற்றலை நல்லெண்ணெயில் வறுத்து... நரம்பு வலுப்பெற மருத்துவர் சிவராமன் யோசனை
இந்த கீரையின் வற்றலை நன்றாக நல்லெண்ணெயில் வறுத்துவிட்டு சுடு சோறில் போட்டு சாப்பிட்டால், நரம்புகளை வலுப்படுத்தும் என்று மருத்துவர் கு. சிவராமன் ஆலோசனை கூறுகிறார். அது என்ன கீரை, அதை எப்படி சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம்.

இந்தியாவில் 2010-களுக்கு பிறகு இயற்கை உணவுகள், பாரம்பரிய உணவுகள் மீதான விழிப்புணர்வு கனிசமகா அதிகரித்துள்ளது. அதற்கு பாரம்பரிய மருத்துவர்கள், இயற்கை ஆர்வலர்கள் பலரும் ஏற்படுத்திய விழிப்புணர்வு முக்கிய காரணம்.
Advertisment
அந்த வரிசையில், மருத்துவர் கு. சிவராமன் தமிழ்நாட்டின் பல நகரங்கள், சிறு நகரங்கள், கிராமங்களில் கூட்டங்களில் நம்முடைய பாரம்பரிய உணவில் உள்ள ஆரோக்கிய நன்மைகள், சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
இந்த கீரையின் வற்றலை நன்றாக நல்லெண்ணெயில் வறுத்துவிட்டு சுடு சோறில் போட்டு சாப்பிட்டால், நரம்புகளை வலுப்படுத்தும் என்று மருத்துவர் கு. சிவராமன் ஆலோசனை கூறுகிறார். அது என்ன கீரை, அதை எப்படி சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம்.
Advertisment
Advertisements
கீரைகளின் நன்மைகள் குறித்து ஹெல்தி தமிழ்நாடு யூடியூப் சேனலில் பேசியுள்ள மருத்துவர் கு. சிவராமன் கூறியிருப்பதாவது: “பொதுவாக கீரைகளை நிறைய எடுத்துக்கொள்வது நரம்பை வலுப்படுத்த வைக்கும். முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை என எல்லா கீரைகளுமே நரம்புகளை வலுப்படுத்தக்கூடிய தன்மை உள்ளது. அந்தக் கீரைகளை ஏதாவது ஒரு வகையில் எடுத்துக்கொள்ளலாம்.
மணத்தக்காளி கீரை, மணத்தக்காளி விதை வற்றலை நன்றாக நல்லெண்ணெயில் வறுத்துவிட்டு சுடு சோறில் போட்டு சாப்பிட்டால், புற நரம்புகளை வலுப்படுத்தும். மணத்தக்காளி கீரையை தேங்காய் பால், சிறுபருப்பு போட்டு குழம்பு மாதிரி செய்து அதை நாம் உணவில் எடுத்துக்கொள்ளலாம். கிராம்பில் ஒரு சூரணம் செய்வார்கள். அதாவது கிராம்பு, அமுக்ராகிழங்கு எல்லாம் போட்டு சித்த மருத்துவர்கள் ஒரு பொடி செய்வார்கள். இந்த கிராம்பு சூரணம் கரபாதசூலை என்று சொல்லக்கூடிய பெரிஃப்ரல் நெர்வ்ஸில் ஏற்படக்கூடிய நோயை நீக்கி, அதில் எரிச்சல் வரத் தன்மையைப் போக்கும் என்று இன்றைக்கு பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.
அதனால், பெரிஃப்ரல் நெர்வ்ஸில் என்ன நோய் இருக்கிறதோ அதற்கான வைத்தியம் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்புறம், பெரிஃப்ரல் நெர்வ்ஸை வலுப்படுத்தக்கூடிய இந்த விஷயங்களை எடுத்துக்கொண்டோம் என்றால், இந்த பிரச்னை ஒரு பெரிய நோயாக பின்னாளில் உருவெடுக்காது” என்று மருத்துவர் கு. சிவராமன் ஆலோசனை கூறுகிறார்.