பால் மிகச் சிறப்பானதா இல்லை என்பது உலகம் முழுக்கவே ஒரு பெரிய சர்ச்சை என்று கூறும் மருத்துவர் சிவராமன், பால் குழந்தைகளுக்கு ஓ.கே... ஆனால், பெரியவர்கள் தினமும் பால் அருந்துவதால் ஏற்படும் அபாயம் குறித்து பேசியுள்ளார்.
பாலின் அபாயம் குறித்து மருத்துவர் சிவராமன் பேசுகையில், “பால் மிகச் சிறப்பானதா இல்லை என்பது உலகம் முழுக்கவே ஒரு பெரிய சர்ச்சை. ஏனென்றால், அன்றைக்கு இருந்த பால் வேறு, இன்றைக்கு இருக்கிற பால் வேறு என்பதனால், அந்த சர்ச்சை நிறையவே இருக்கிறது. அதற்கு காரணம், மாட்டுத் தீவணம் வேறு, பாலின் தரம், பால் ப்ராசஸிங் என எல்லாமே, தொழில்நுட்பரீதியாக என்ன செய்கிறார்கள் என்பதை நீங்கள் எல்லாருமே தெரிந்துகொள்ளலாம். பால் ஒரு பெரிய சர்ச்சைக்குரிய பொருள்தான்.
ஏனென்றால், பாலில் இருந்து வரக்கூடிய ஒரு புரதம், நம்முடைய கணையத்தில் செல்சை கொஞ்சம் பாதிக்கிறது. ஆய்வுகள் வந்துகொண்டே இருக்கிறது. அதனால், அதிகமான பால் குடிக்கிற குழந்தைகளுக்கு பிற்காலத்தில் சர்க்கரை வியாதி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால், குழந்தைகளுக்கு ஒரு 6 - 7 வயது வரைக்கும் கொடுக்கலாம். ஆனால், 45 வயதில், 85 கிலோ இருந்துகொண்டு பால்தான் குடிப்பேன் என்றால், அது வேண்டாம். பால் குடித்தால்தான் தூக்கம் வரும் என்பதெல்லாம் ஒரு பழகக்த்தில் வரக்கூடிய விஷயம்.
நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய, யோசிக்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கிறது. எருமைப் தப்பானது கிடையாது. எருமை சிறப்பானதுதான், எருமை நெய் நல்லதுதான், எருமைப் பால் நல்லதுதான்.
சிலர், பசும் பால் மிகச் சிறப்பானது, எருமைப் பால் சரி இல்லை என்று சாதிய ரீதியாக சில வேறுபாடுகளைக் கொண்டுவந்துவிட்டார்கள். அறிவியல் ரீதியாக 2 விஷயங்களிலும் மிகச் சிறப்பான விஷயங்கள் இருக்கிறது. எருமை கருப்பாக இருந்ததால், நாம் எப்படி கொஞ்சம் கருப்பாக இருக்கும்போது, ஓரமாக உக்கார வைத்தார்களோ, எருமையைப் பார்க்கும்போது, அப்படிதான் நடந்திருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால், எருமைப் பால், எருமை நெய்யில் மிகச் சிறப்பான குணங்கள் இருக்கிறது அதை நீங்கள்தான் யோசிக்க வேண்டும்.
பொதுவாக, குழந்தைகளுக்கு, மாதவிடாய் யொட்டிய பருவத்தில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு, அல்லது ஏதாவது அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வரக்கூடிய நிலையில் இருப்பவர்கள், மெலிந்து இருப்பவர்கள், உடல் ஊட்டம் தேவைப்படுபவர்கள் பால் எடுத்துக்கொள்ளலாம். மற்றவர்களுக்கு பால் வேண்டாம். அதிலும் குறிப்பாக, தேநீரில் பால் கலந்து குடிக்க வேண்டாம்.
உலகத்திலேயே தேநீரில் பால் ஊற்றி குடிக்கும் மக்கள் நாம்தான். விமானத்தில் எல்லாம் வெறும் தேநீர் மட்டும்தான் கொடுப்பார்கள். தேநீரில் பால் ஊற்ற வேண்டும் என்றாலே, நாம் எங்கேயோ இந்தியா பக்கம் இருந்து வருவதாக பார்ப்பார்கள். ஏனென்றால், தேநீரில் அவ்வளவு சிறப்பு இருக்கிறது. அதில் பால் ஊற்றினால், அதன் சிறப்பு குறைகிறது” என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.