எலும்பை பலப்படுத்தும் இந்த 2 பொருள்கள்... இப்படி சாப்பிட்டு பாருங்க: டாக்டர் உஷா நந்தினி
எலும்பை பலப்படுத்தும் இந்த 2 பொருட்களை தினமும் எடுத்துக்கொண்டால், மூட்டுகளில் வரக்கூடிய வலி படிப்படியாக குறையும். எலும்புகளும் ஆரோக்கியமாக இருப்பதற்கு ரொம்ப உதவியாக இருக்கும் என்று டாக்டர் உஷா நந்தினி கூறுகிறார். அந்த 2 பொருட்கள் என்ன என்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

எலும்புகளை வலுப்படுத்தும் உணவுப் பொருட்கள் குறித்து, டாக்டர் உஷா நந்தினி ஆலோசனைகளை வழங்கியுள்ளார். (Image Source: PuthuyugamTV)
எலும்பை பலப்படுத்தும் இந்த 2 பொருட்களை தினமும் எடுத்துக்கொண்டால், மூட்டுகளில் வரக்கூடிய வலி படிப்படியாக குறையும். எலும்புகளும் ஆரோக்கியமாக இருப்பதற்கு ரொம்ப உதவியாக இருக்கும் என்று டாக்டர் உஷா நந்தினி கூறுகிறார். அந்த 2 பொருட்கள் என்ன என்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
Advertisment
எலும்புகளை வலுப்படுத்தும் உணவுப் பொருட்கள் குறித்து, புதுயுகம் தொலைக்காட்சியில் டாக்டர் உஷா நந்தினி ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
டாக்டர் உஷா நந்தினி கூறுகிறார்: “தினமும் அரை ஸ்பூன் அளவு வெள்ளை எள் நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் வெள்ளை எள் அரை ஸ்பூன் அளவு வாயில் போட்டு மென்னு சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ப்ளர் வெநீர் குடிக்க வேண்டும். இப்படி தினமும் வெள்ளை எள் சாப்பிட்டு வந்தால் எலும்புத் தேய்மானம் நோய் படிப்படியாக குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
அதே போல, தினமும் காலையில் பல் துலக்கிய பிறகு, தேங்காயை சின்ன சின்ன துண்டுகளாக எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் எலும்புத் தேய்மானம் பிரச்னை குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தேங்காயை துருவலாகவும் சாப்பிடலாம்.
Advertisment
Advertisements
இதில் என்ன என்றால், கால்சியம், மெக்னீசியம், ஜிங்க், இது மூன்றும்தான் எலும்பின் வளர்ச்சிக்கும், எலும்பு உருவாக்கத்துக்கு தேவையான முக்கியமான ஒரு கனிமப் பொருளாக இருக்கிறது. பைட்டோ கெமிக்கல், மினரல் என எல்லாமே இருக்கக்கூடிய உணவாக இருக்கிறது தேங்காயும் வெள்ளை எள்ளும். அதனால், வெள்ளை எள் தினமும் அரை ஸ்பூன் எடுத்துக்கொள்ளலாம். அதே போல, காலையில் தினமும் தேங்காய் ஒரு சின்ன துண்டு சாப்பிடலாம்.
அடுத்தது, கருவேப்பிலை, ஒரு இனுக்கு கருவேப்பிலை எடுத்து தண்ணீரில் கழுவிவிட்டு அதை வாயில் போட்டு மென்னு சாப்பிட்டுவிட்டு கூட ஒரு டம்ப்ளர் வெந்நீர் குடித்துவிட்டால் போதுமானது.
அடுத்தது, பாதாம் பால், இதை நம் வீட்டிலேயே தயார் பண்ண வேண்டும். தினமும் காலையில் 6-7 பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்துவிடுங்கள். சாயந்திரம் பாதாம் பருப்பு தோலை உரித்துவிட்டு நன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்துவிடுங்கள். அதனுடன் நீங்கள் வெதுவெதுப்பாக பால் சேர்த்து, கொஞ்சம் சுக்குபொடி போட்டு இரவு தூங்குவதற்கு முன்பு குடியுங்கள். இப்படி பாதாம் பால் குடித்துவந்தால், மூட்டுகளில் வரக்கூடிய வலி படிப்படியாக குறையும். எலும்புகளும் ஆரோக்கியமாக இருப்பதற்கு ரொம்ப உதவியாக இருக்கும்.” என்று டாக்டர் உஷா நந்தினி கூறுகிறார்.