தினமும் இரவில் 4- 5 பாதாம் ஊற வைத்து... இதைச் செய்தால் சுகர் குறையும்: டாக்டர் உஷா நந்தினி
தினமும் இரவில் 4 முதல் 5 பாதாம் கொட்டைகளை ஊற வைத்து காலையில் அதன் தோலை உரித்து சாப்பிட்டால் சுகர் குறையும் என்று டாக்டர் உஷா நநந்தினி ஆலோசனை கூறுகிறார். பாதாமில் இன்னும் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன என்று பார்ப்போம்.
தினமும் இரவில் 4 முதல் 5 பாதாம் கொட்டைகளை ஊற வைத்து காலையில் அதன் தோலை உரித்து சாப்பிட்டால் சுகர் குறையும் என்று டாக்டர் உஷா நநந்தினி ஆலோசனை கூறுகிறார். பாதாமில் இன்னும் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன என்று பார்ப்போம்.
தினமும் இரவில் 4 முதல் 5 பாதாம் கொட்டைகளை ஊற வைத்து காலையில் அதன் தோலை உரித்து சாப்பிட்டால் சுகர் குறையும் என்று டாக்டர் உஷா நநந்தினி ஆலோசனை கூறுகிறார். பாதாமில் இன்னும் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன என்று பார்ப்போம்.
Advertisment
நட்ஸ் என்கிற கொட்டை வகைகள் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து புதுயுகம் தொலைக்காட்சியில் என்றும் இனியவை நிகழ்ச்சியில் டாக்டர் உஷா நந்தினி வழங்கிய ஆலோசனைகளை நாம் பார்ப்போம்.
அதில் டாக்டர் உஷா நந்தினி கூறியிருப்பதாவது: “நிறைய பேர் கொட்டை வகைகளை சாப்பிடுகிறோம். அதாவது ஆங்கிலத்தில் நட்ஸ் என்று சொல்லப்படுகிற கொட்டை வகைகளில், எந்த கொட்டையில் என்ன பலன், எந்த முறையில் சாப்பிட வேண்டும் என்று தெரிந்துகொண்டு சாப்பிட்டால் அதனுடைய பலன் இன்னும் அதிகமாக இருக்கும் என்று டாக்டர் உஷா நந்தினி கூறுகிறார்.
பாதாம் கருப்பை நோய்களுக்கு, கருமுட்டை, சினைப்பை ஆரோக்கியத்திற்கு சிறந்த மருந்து என்று சொல்லலாம். கருப்பையின் வளர்ச்சிக்கும், கருமுட்டையின் வளர்ச்சிக்கும், கருப்பையின் ஆரோக்கியத்திற்கும் ரொம்ப ஆதரவாக இருக்கும்.
Advertisment
Advertisements
சிலருக்கு உடலில் அவ்வப்போது அரிப்பு வருவதாகக் கூறுகிறார்கள், இதெல்லாம் வறட்சியின் காரணமாக ஏற்படக்கூடியது. குறிப்பாக தைராய்டு சார்ந்த பிரச்னை இருக்கக்கூடியவர்கள் இந்த மாதிரி தோல் வறட்சியினால் கஷ்டப்படுவார்கள். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைபாடு இருக்கக்கூடியவர்களும் இந்த மாதிரி தோல் வறட்சியினால் கஷ்டப்படுவார்கள். இதற்கு பாதாம் ஒரு சிறந்த மருத்து என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
பாதாமில் மெக்னீசியம் தாது அதிகமாக இருப்பதால், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் பாதாம் ஆதரவாக இருக்கும்.
பாதாமில் மியூஃபா என்கிற கொழுப்பு அமினோ அமிலம் இருப்பதால் இருதயத்தின் ஆரோக்கியத்திற்கும் ரொம்ப ஆதரவாக இருக்கும். ஒவ்வொரு செல்லினுடைய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கக்கூடிய தன்மையும் பாதாமில் இருக்கிறது.
பாதாமில் கிளைசெமிக் இண்டெக்ஸ் ரொம்ப குறைவு, அதனால், ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் பாதாமுக்கு பங்கு இருக்கிறது.
அதனால், இந்த பாதாமை யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம் என்றால், குழந்தை பாக்கியத்திற்காக முயற்சி செய்யக்கூடியவர்கள், கருமுட்டை வளர்ச்சி குறைவாக இருப்பவர்கள், எலும்புகளின் ஆரோக்கியம் குறைவாக இருப்பவர்கள், சர்க்கையின் அளவைக் கட்டுப்படுத்த முயற்சி செய்பவர்கள் கண்டிப்பாக பாதம் எடுத்துக்கொள்ளலாம்.
அவர்கள் இந்த பாதாமை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால், 4 முதல் 5 பாதாமை இரவு ஊற வைத்து, பின்னர் அதை காலையில் தோல் உரித்து எடுத்துக்கொள்ளலாம். அப்படி சாப்பிட்டால், சுகர் குறையும்” என்று டாக்டர் உஷா நந்தினி கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.