இரவு தூங்கும் முன்பு ஒரு கிளாஸ் இந்த டீ; எடை குறைப்புக்கு இதை ஃபாலோ பண்ணுங்க: டாக்டர் உஷா நந்தினி
உடல் எடையைக் குறைப்பதற்கு தினமும் இரவு நேரத்தில் சாப்பிட்ட பிறகு ஒரு பானம் குடித்தால், எளிதாக தொப்பையும் குறையும், உடல் எடையையும் குறைக்க முடியும் என்று டாக்டர் உஷா நந்தினி பரிந்துரைக்கிறார். அது என்ன பானம் என்று இங்கே பார்ப்போம்.
உடல் எடையைக் குறைப்பதற்கு தினமும் இரவு நேரத்தில் சாப்பிட்ட பிறகு ஒரு பானம் குடித்தால், எளிதாக தொப்பையும் குறையும், உடல் எடையையும் குறைக்க முடியும் என்று டாக்டர் உஷா நந்தினி பரிந்துரைக்கிறார். (image screengrab from YouTube from DrMSUshaNandhini)
உடல் எடையைக் குறைப்பதற்கு தினமும் இரவு நேரத்தில் சாப்பிட்ட பிறகு ஒரு பானம் குடித்தால், எளிதாக தொப்பையும் குறையும், உடல் எடையையும் குறைக்க முடியும் என்று டாக்டர் உஷா நந்தினி பரிந்துரைக்கிறார். அது என்ன பானம் என்று இங்கே பார்ப்போம்.
Advertisment
உணவு முறை, உடல் உழைப்பு இன்மை, வாழ்க்கை முறை போன்றவற்றால் உடல் எடை கூடியதால், பலரும் தங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக, உடல் எடையைக் குறைப்பதற்கு தினமும் இரவு நேரத்தில் சாப்பிட்ட பிறகு ஒரு பானம் குடித்தால், எளிதாக தொப்பையும் குறையும், உடல் எடையையும் குறைக்க முடியும் என்று டாக்டர் உஷா நந்தினி பரிந்துரைக்கிறார்.
உடல் எடையைக் குறைப்பதற்கான பானத்தைத் தயாரிப்பது எப்படி என்று தனது யூடியூப் சேனலில் டாக்டர் உஷா நந்தினி கூறியுள்ளதை இங்கே தருகிறோம்.
Advertisment
Advertisements
சன்னமான லவங்கப்பட்டை பொடி 2 சிட்டிகை, மஞ்சள் தூள் 2 சிட்டிகை, மிளகுபொடி 2 சிட்டிகை, இதை எல்லாத்தையும் 200 மி.லி தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து டீ மாதிரி தயார் செய்து எடுத்துக்கொள்ளுங்கள். அதில் உங்களுக்கு தேவையான அளவு தேன் கலந்து, தினமும் இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன்னால், நன்றாக சூடாகக் குடித்துவிட்டு படுங்கள்.
இந்த மாதிரி, தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு இந்த பானத்தை சூடாகக் குடித்தால், பி.சி.ஓ சார்ந்த பிரச்னைகள், ஹார்மோன் சார்ந்த பிரச்னைகள், தைராய்டு சார்ந்த பிரச்னைகள், உங்களுக்கு தேவையற்ற முடி வளர்ச்சி, உடல்பருமன் எல்லாமே கட்டுப்பாட்டுக்கு வர வாய்ப்புகள் இருக்கிறது.