தினமும் ஏதாவது ஒரு சூப் எடுத்துக்கிட்டோம் என்று சொன்னால் நாம் சீக்கிரமாக எடை இழக்க வைக்க முடியும். அப்படி அன்றாடம் நீங்கள் உணவில், உங்கள் வீட்டில் இருந்தபடியே சில சூப் பண்ணி எடுத்துக்கொண்டீர்கள் என்றால் போதும். தேவையில்லாமல் டீ, காபி, ஜூஸ் குடிக்கிறேன் என்று சொல்லி உடல் எடையை அதிகரிக்கிறதோட மட்டும் அல்லாமல், ஹார்மோன் சமநிலையையைக் குலைத்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு பதிலாக நாம் இந்த சூப்களை குடித்தால், ஈஸியாக எடை குறைக்கலாம் என்று டாக்டர் உஷா நந்தினி கூறுகிறார்.
டாக்டர் எம்.எஸ். உஷாநந்தினி எடை குறைப்பதற்கான சூப்களை எப்படி செய்து குடிக்க வேண்டும் என்பது குறித்து பேசியுள்ளார். டாக்டர் உஷாநந்தினி கூறுகையில்,
நிறைய பேருக்கு உடம்பு இளைக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. தினமும் ஏதாவது ஒரு சூப் எடுத்துக்கிட்டோம் என்றால், நாம் சீக்கிரமாக உடலை இளைக்க வைக்க முடியும். சில சூப் எடுத்துக்கொண்டால் போதும். உங்க வயிறைச் சுற்றி, இடுப்பை சுற்றி இருக்கும் கொழுப்பு குறையும். மொத்தமாக உங்க உடல் எடையும் குறையும்.
முதலில் கொள்ளு சூப், இந்த கொள்ளு சூப் உடல் எடையை மட்டும் குறைக்காமல் உங்க ரத்தத்தில் இருக்கக்கூடிய கொழுப்பையும் கெட்ட கொழுப்பையும் குறைக்கக்கூடிய தன்மை உடையதாக இருக்கிறது. கொள்ளு எடுத்து இரவே தண்ணீரில் ஊறவைத்துவிடுங்கள். காலையில் அதை வேகவைத்து அந்த தண்ணீரை மட்டும் எடுத்துக்கிட்டு அதுல கொஞ்சமாக பெருங்காயத்தூள், கொஞ்சமாக மிளகுத்தூள் கொஞ்சம் சீரகத்தூள், சால்ட் போட்டு குடித்தால், போதுமானது. இது உங்கள் ரத்த அடர்த்தியை குறைத்து உங்க ரத்த குழாய்கள் அடைப்பில்லாமல் செய்கிறது, அதே சமயம் உங்க உடல் எடையை குறைக்கக்கூடிய தன்மை உடையதாகவும் உள்ளது. தொப்பையை குறைக்கக்கூடிய தன்மை உடையதாகவும் இருக்கிறது இந்த கொள்ளு சூப்.
அடுத்து, முருங்கைக்கீரை சூப் பிரச்னையா இருக்கட்டும் அது எப்படி சரி பண்றதுனே நமக்கு தெரிய மாட்டேங்கிறது. ஆனால், முருங்கை கீரையில் இருக்கக்கூடிய நிறைய கனிமச்சத்துக்கள் ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதால், ஹார்மோன் குறைபாட்டால் உங்களுக்கு எடை கூடி இருந்தது என்று சொன்னால் அதை சரிப்படுத்தக்கூடிய தன்மை முருங்கைக்கீரைக்கு இருக்கிரது. அதற்கு ரொம்ப பெரிய விஷயம் எல்லாம் தேவையில்லை, முருங்கை கீரை கொழுந்தாக இருந்தால் நல்லது. முருங்கை கீரையை தண்ணில போட்டு மூடி வச்சிடுங்க, ஒரு 20 நிமிடம் கொதித்த பிறகு, அதில் இருக்கக் கூடிய முழுமையான சத்து முழுமையும் அந்த தண்ணில இறங்கி இருக்கும். அப்படியே அந்த இலைகளையும் மென்னு சாப்பிட முடியும். கொஞ்சமா உப்பு போட்டு அந்த இலைகளையும் சாப்பிட்டுட்டு அந்த தண்ணியும் குடிச்சிருங்க. இந்த மாதிரி குடிச்சீங்களா தேவையற்ற ஊளை சதை குறையறதோட உடல் எடையும் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது” என்று டாக்டர் உஷாநந்தினி கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.