வயாகரா மாத்திரையை தூக்கி போடுங்க... திருப்தியான தாம்பத்தியதுக்கு இந்த ஜூஸ்: டாக்டர் யோகா வித்யா
இன்றைக்கு பெரும்பாலான பல மனமுறிவுகளுக்கு காரணம் திருப்தியான தாம்பத்திய உறவு இல்லை என்பதே காரண இருக்கிறது. தாம்பத்திய உறவில் ஈடுபட பலரும் வயாகரா மாத்திரையைப் பயன்படுத்துகிறார்கள். வயாகரா மாத்திரையைப் பயன்படுத்துவதால் பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன.
திருப்தியான தாம்பத்தியத்திற்கு வயாகரா வேண்டாம், அதற்கு பதிலாக, வீட்டிலேயே என்ன மாதிரியான விஷயத்தை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து டாக்டர் யோக வித்யா ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இன்றைக்கு பெரும்பாலான பல மனமுறிவுகளுக்கு காரணம் திருப்தியான தாம்பத்திய உறவு இல்லை என்பதே காரண இருக்கிறது. தாம்பத்திய உறவில் ஈடுபட பலரும் வயாகரா மாத்திரையைப் பயன்படுத்துகிறார்கள். வயாகரா மாத்திரையைப் பயன்படுத்துவதால் பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன.
Advertisment
திருப்தியான தாம்பத்தியத்திற்கு வயாகரா வேண்டாம், அதற்கு பதிலாக, வீட்டிலேயே என்ன மாதிரியான விஷயத்தை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து டாக்டர் யோக வித்யா ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
வயாகரா மாத்திரைகளைத் தவிர்த்து திருப்தியான தாம்பத்தியத்திற்கு வீட்டிலேயே என்ன மாதிரியான விஷயங்களைச் செய்ய வேண்டும் என்பது குறித்து எத்னிக் ஹெல்த்கேர் டாக்டர் பி. யோக வித்யா ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
டாக்ட பி. யோக வித்யா கூறுகையில், “பொதுவாக எந்தவொரு செயற்கை மருந்துமே தொடர்ந்து நாள்பட எடுக்கும்போது, அதற்கான பின்விளைவுகள் இருக்கிறது எல்லாருக்குமே தெரிந்த ஒரு விஷயம். இந்த வயாகரா மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக்கொள்பவர்களுக்கு, நிறங்களைப் பிரித்து அறிதலில் பிரச்னை வரும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. அதாவது, நீல நிறத்தையும், பச்சை நிறத்தையும் சரியாக அடையாளம் காண முடியாமல் குழப்பம் ஏற்படும் என்கிற அளவுக்கு கண் பாதிக்கப்படும்.
Advertisment
Advertisements
அதுமட்டுமில்லாமல், நோய்வாய்ப்படுவது, குழப்பம், இதயத்தில் பிரச்னை, வயிற்றுவலி, ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்றவை ஏற்பட்டு மரணம் கூட ஏற்படலாம். என்று சொல்லப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, மது அருந்திவிட்டு வயாகரா மாத்திரை எடுத்துக்கொண்டால், நிறைய பேர் ஹார்ட் அட்டாக்கால் இறந்துபோயுள்ளனர். அதற்கான பதிவுகளும் உள்ளன. அதனால், எந்தவொரு செயற்கையான மருந்தையும் தொடர்ந்து எடுக்கக்கூடாது. ஆனால், அதற்கு இயற்கையான தீர்வு என்ன என்றால், அதற்கு நீங்கள் நைட்ரஸ் ஆக்சைடு நிறைந்த உணவுகளை நீங்கள் நிறைய எடுத்துக்கொள்ளலாம்.
பீட்ரூட், மாதுளம்பழம், தர்பூசணி ஆகிய இந்த மூன்றிலும் நைட்ரஸ் ஆக்சைடு நிறைந்துள்ளது. இந்த மூன்றையும் சம பங்கு எடுத்துக்கொண்டு மிக்ஸியில் போட்டு அடித்து, ஜூஸ் ஆக குடிக்கும்போது, நைட்ரஸ் ஆக்சைடு ரத்தத்தை பம்ப் செய்து சப்ளையை அதிகரித்து கொடுக்கும். இதனால், விரைப்புத் தன்மை பிரச்னை இருந்தால் எளிதாக சரியாகி விரைப்புத் தன்மை நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், இரவ் நேரத்தில் பாலில் கசகசா, ஜாதிக்காய் இரண்டையும் போட்டு காய்ச்சி வடித்துக் குடிக்கலாம். கசகசா 1 டீஸ்பூன், ஜாதிக்காய் பொடி செய்து 1/4 டீஸ்பூனுக்கும் குறைவாகப் பாலில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, அதில் தேன், பனங்கற்கண்டு குடித்தால் எளிதாக விந்து அடர்த்தி அதிகரிக்கும். இதன் மூலம் விரைப்புத் தன்மை பிரச்னையில் இருந்து மீண்டு வரலாம். இப்படி ஒரு 7 நாள் குடிக்கும்போதே, விந்து அடர்த்தி ஆவதை உணர முடியும்.” என்று ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.