டிராகன் பழம் சுவைக்காத ஏராளமான மக்கள் இன்னும் தமிழகத்தில் உள்ளனர். அதனாலேயே பலருக்கும் இந்த பழத்தை தன் வாழ்வில் ஒருமுறையாவது சுவைத்து பார்க்க வேண்டும் என்பது ஆசை. இணையத்தில் டிராகன் பழத் தோலை உரித்து, அதன் உள்ளிருக்கும் சதையை பார்க்கும் போது, நம்மையும் அறியாமல் நாவில் எச்சில் ஊறும்..
சமீபத்தில், செஃப் குணால் கபூரும் இந்த பழத்தைப் பற்றி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். அதன் தனித்துவமான தோற்றம் மற்றும் சுவைக்காக மக்கள் அதை ரசித்தாலும், அது ஆரோக்கிய நலன்களையும் வழங்கக்கூடும் என்று சான்றுகள் தெரிவிக்கின்றன. இங்கே நான் சில ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு வெட்டுவது என்பதைப் பகிர்ந்துள்ளேன்.
எப்படி வெட்டுவது?
டிராகன் பழங்களை வெட்டுவது எப்படி என்று செஃப் அந்த வீடியோவில் செய்து காட்டினார்.
முதலில் கட்டிங் போர்டில் டிராகன் பழங்களை வைக்கவும்.
ஒரு கூர்மையான செஃப் கத்தியைப் பயன்படுத்தி இரண்டு முனைகளிலும் இருக்கும் காம்பு பகுதியை வெட்டவும். இப்போது வீடியோவில் காட்டியபடி டிராகன் பழத்தின் தோலில், கத்தியைக் கொண்டு நேராக வெட்டி அப்படியே உங்கள் விரல்களை பயன்படுத்தி, ஆரஞ்சு பழத்தோலை உரிப்பது போல தோலை உரிக்கவும்.
இப்படி செய்வதால் எளிதாக டிராகன் பழத்தின் தோலை உரிக்கலாம். பின்னர் உள்ளே இருக்கும் அந்த சுவையான சதைப் பகுதியை உங்களுக்கு பிடித்த வடிவத்தில் வெட்டி அப்படியே ருசிக்கலாம் அல்லது ஒரு கிண்ணத்தில் வைத்து ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல ஸ்பூன் கொண்டும் பழத்தை சாப்பிடலாம்.
நீங்கள் ஏன் அதை சாப்பிட வேண்டும்?
ஊட்டச்சத்து நிபுணர் சோனியா பக்ஷி கூறுகையில், டிராகன் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், புற்றுநோய் மற்றும் முன்கூட்டிய முதுமை போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களால் செல்களை சேதப்படுத்தாமல் பாதுகாக்க உதவுகிறது.
இன்னும் சில பலன்கள்
*இது இயற்கையாகவே கொழுப்பு இல்லாதது மற்றும் நார்ச்சத்து அதிகம். இது உணவுக்கு இடையில் நீண்ட நேரம் உங்களை முழுதாக வைத்திருக்க உதவும்.
*இது உங்கள் இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது.
*இதில் ப்ரீபயாடிக்குகள் உள்ளன, அவை உங்கள் குடலில் உள்ள புரோபயாடிக்ஸ் எனப்படும் ஆரோக்கியமான பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கிறது. உங்கள் உடலில் அதிக ப்ரீபயாடிக்குகள் இருந்தால், உங்கள் குடலில் உள்ள நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்களின் சமநிலையை மேம்படுத்தலாம்.
*இது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். டிராகன் பழத்தில் வைட்டமின் சி மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகம் உள்ளன, அவை உங்கள் நோயெதிர்ப்பு அமைப்புக்கு நல்லது. இது உங்கள் இரும்புச் சத்தையும் அதிகரிக்கலாம்.
சாப்பிட சிறந்த நேரம்
செரிமான அமைப்பு, பழங்களின் சர்க்கரையை விரைவாக உடைத்து, அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குவதால், பழங்களை சாப்பிடுவதற்கு காலை சிறந்த நேரமாக கருதப்படுகிறது. டிராகன் பழத்தை மதியம் அல்லது இரவிலும் சாப்பிடலாம். உண்மையில், இரவில் சாப்பிடும்போது, அது சிறந்த தூக்கத்தைத் தூண்ட உதவுகிறது, என்று பக்ஷி குறிப்பிட்டார்.
எப்படி சாப்பிடலாம்?
*அன்னாசி மற்றும் மாம்பழம் போன்ற பிற வெப்பமண்டல பழங்களுடன் உங்கள் ஃப்ரூட் சாலட்டில் சேர்க்கலாம்.
*ஐஸ்கிரீம் செய்து சாப்பிடலாம்.
எலுமிச்சை போல சுவையை அதிகரிக்க ஜூஸ் மற்றும் தண்ணீரில் பிழியலாம்
சாலட், தயிரில் டாப்பிங்காக பயன்படுத்தலாம்.
*இதை உறைய வைத்து ஸ்மூத்தியாக பிளெண்ட் செய்யலாம்.
எச்சரிக்கை
பக்ஷியின் கூற்றுப்படி, டிராகன் பழம் வயிற்று உப்பிசம் மற்றும் வயிற்றுப்போக்குடன் தொடர்புடையது என்பதால் ஒருவர் அதிகமாக சாப்பிடுவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் செரிமான அமைப்பு அனுமதிப்பதை விட அதிகமாக உட்கொள்வது, அதன் நார்ச்சத்து, சர்க்கரை மற்றும் ப்ரீபயாடிக் உள்ளடக்கம் காரணமாக வயிற்று உபாதைக்கு வழிவகுக்கும் என்று பக்ஷி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.