சாப்பிட்ட பிறகு உங்கள் இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகக் கூடும், இது நிறைய பேருக்கு ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கிறது, குறிப்பாக சர்க்கரை நோய் மற்றும் பிரிடயாபீடிக்ஸ் க்கான பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இது மாதிரி ஏற்படலாம்.
இதுகுறித்து மருத்துவர் செந்தில்குமார் தனது யூடியூப் பக்கத்தில் நாம் சாப்பிட்ட பிறகு அதிகமாகும் சர்க்கரையை கட்டுப்படுத்த 5 எளிய வழிகளைப் பற்றி கூறி இருக்கிறார். இவை உடலுக்கு நல்ல பயன்களையும், சர்க்கரை நிலைகளை நிலைத்திருப்பதிலும் உதவும்.
டிப் 1: சாப்பிடும் முன் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அதனால் வயிறு நிறைந்து விடும். சரியான அளவான உணவை எடுத்து கொள்ளலாம். தேவையற்ற அதிகமான உணவுகள் சாப்பிட தூண்டாது.
டிப் 2: மாவு சத்து குறைக்க வேண்டு. புரதமும் நல்ல கொழுப்பும் சேர்க்க வேண்டும். அதற்காக கொண்டக்கடலை, மூக்கடலை, பாதம், நட்ஸ் மற்றும் பயிறு வகைகள் அதிகம் சாப்பிடலாம்.
Control Rising Sugar After Meals சாப்பிட்ட பிறகு அதிகமாகும் சர்க்கரையை கட்டுப்படுத்த - 5 வழிகள்!
டிப்ஸ் 3: நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை உண்ண வேண்டும். இது உடலில் விரைவில் கரைந்து போகாது. அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். இதுமட்டுமின்றி, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் வயிறு நிறைந்து விடும். எனவே அதிக உணவு எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. அதேபோல நீர்க்காய்கள் சேர்க்க வேண்டும்.
டிப்ஸ் 4. முதலில் புரதம், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை முழுமையாக சாப்பிட்டு விட்டால் வயிறு நிறைந்துவிடும். அதனால் மாவுச்சத்து நிறைந்த உணவுகள் இருந்தாலும் சாப்பிட முடியாது. எனவே இரத்த சர்க்கரை அளவையும் இதனால் கட்டுப்படுத்த முடியும்.
5. சாப்பிட்டுவிட்டு படுக்க கூடாது உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். சாப்பிட்ட உடனேயே படுத்துக்கொள்வது அல்லது உட்கார்ந்திருப்பது உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கச் செய்யும் என்று மருத்துவர் கூறுகிறார். இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க, சாப்பிட்ட பிறகு ஒரு 15 நிமிடம் நடப்பது நல்லது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.