மாங்காய் சீசன் வந்தாச்சு... இப்படி வெயில் காய வச்சு மிட்டாய் ரெடி பண்ணுங்க: ஒரு வருசம் ஆனாலும் கெடாதாம்!
கோடைக் காலம் வந்துவிட்டது, கோடை என்றால் வெயில் மட்டுமல்ல, முக்கனிகளும் கிடைக்கும் பருவ காலம். கோடையில்தான் மாங்காய் சீசன் தொடங்கும். மாங்காய்களைக் கொண்டு வீட்டிலேயே மாங்காய் மிட்டாய் செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையான மாங்காய் மிட்டாய் Image Screengrab from YouTube varshika's kitchen & lifestyle Tamil
நம்முடைய உணவு என்பது அந்தந்த பருவ காலங்களில் விளைகிற காய்கறிகள், பழங்கள், தானியங்களை எடுத்துக்கொள்வதாக இருக்க வேண்டும்.
Advertisment
கோடைக் காலம் வந்துவிட்டது, கோடை என்றால் வெயில் மட்டுமல்ல, முக்கனிகளும் கிடைக்கும் பருவ காலம். கோடையில்தான் மாங்காய் சீசன் தொடங்கும். மாங்காய்களைக் கொண்டு வீட்டிலேயே மாங்காய் மிட்டாய் செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
வர்ஷிகாஸ் கிச்சன் அண்ட் லைஃப்ஸ்டைல் தமிழ் (varshika's kitchen & lifestyle Tamil) யூடியூப் சேனலில் மாங்காய் மிட்டாய் செய்வது எப்படி என்று செய்துகாட்டியுள்ளனர். அதன்படி மாங்காய் மிட்டாயை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் வாங்க.
இந்த புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையான மாங்காய் மிட்டாய் செய்ய வேண்டும் என்றால் முதலில், ஒட்டுமாங்காய் 2 எடுத்துக்கொள்ளுங்கள், மாங்காயின் மேல் தோல் சீவிக்கொள்ளுங்கள். நீளவாக்கில் கொஞ்சம் தடிமனாகக் கட் பண்ணி எடுத்துக்கொள்ளுங்கள். இப்படி கட் பண்ண மாங்காயை 2 நிமிடம் தண்ணீரில் வேகவைக்க வேண்டும். ரொம்ப வேகக் கூடாது குழைந்துவிடும். தண்ணீரை வடிகட்டிவிட்டு, வேக வைத்த மாங்காயை ஒரு பவுலில் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் அரை கப் அளவு சர்க்கரை போடுங்கள். கொஞ்சமாக உப்பு சேர்த்து பொறுமையாக கிளறிவிட்டு, ஒரு நாள் முழுக்க ஊற விட வேண்டும்.
Advertisment
Advertisements
ஒரு நாள் முழுக்க மாங்காய் நன்றாக ஊறிய பிறகு, எடுத்துப் பார்த்தால், சர்க்கரை நன்றாகக் கரைந்து அந்த தண்ணீரில் மாங்காய் நன்றாக ஊறியிருக்கும். அந்த தண்ணீரை எல்லாம் இறுத்துவிட்டு, அந்த மாங்காய் துண்டுகளை ஒருநாள் முழுக்க வெயிலில் காயவைக்க வேண்டும். அதே போல, இன்னொரு நாள் ஃபேன் காற்றில் காயவைத்தால், மாங்காய் மிட்டாய் தயார். அதில், பொடி செய்த சர்க்கரையைக் கொஞ்சமாக சேர்த்து காற்று புகாத கண்டெய்னரில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். ஒரு வருடம் ஆனாலும் கெடாது. வடிகட்டிய சர்க்கரைத் தண்ணீரை வீணாக்க வேண்டாம். சர்பத் மாதிரி செய்து குடிக்கலாம்.