நமது வாழ்க்கையின் முக்கியமான ஒன்று தண்ணீர் தான். இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு தண்ணீர் பற்றி புதிய பயன்களை வெளிக்கொண்டு வந்துள்ளது.
இந்நிலயில் சரியாக தண்ணீர் குடித்தால் ஆயுள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. நடுத்தர வயது சேர்ந்தவரக்ளின் சோடியம் அளவு அதிகமாக இருந்தால் அதுவே மோசமான ஆரோக்கியத்தின் வெளிபாடுதான். மேலும் அவர்கள் சீக்கிரமாகவே மரணமடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சரிவர தண்ணீர் குடிக்காமல் இருந்தால் சீரம் சோடியத்தின் அளவு ரத்தத்தில் அதிகமாகும்.
ஆரோக்கியமான சீரம் சோடியம் அளவு ஒரு லிட்டருக்கு 135–145 mEq ஆக இருக்கும். மேலும் இந்த அளவு குறைந்தால், நமது உண்மையான வயதைவிட கூடுதலாக வயதானவர்கள் போல் தோற்றமளிப்போம்.
மேலும் ஒரு நாளைக்கு 6 முதல் 8 கிளாஸ் தண்ணீர் அல்லது 2 லிட்டர் தண்ணீர் வரை குடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வயதானவர்கள் அடிக்கடி கழிவறைக்கு செல்ல வேண்டும் என்பதால் தண்ணீர் குடிக்காமல் இருப்பார்கள்.
ஆனால் வயதானவர்கள் அதிக தண்ணீர் குடித்தால், மலச்சிக்கல் ஏற்படாது. மேலும் சிறுநீர் கழிக்கும் வழியில் எந்த நோய்களும் ஏற்படாது.
மேலும் தண்ணீர் மட்டும் குடிக்க வேண்டும் என்பதில்லை. லெமன் ஜூஸ், காப்பி, டீ, குளுக்கோஸ் கலந்த தண்ணீர் இப்படி குடிப்பதால் நமது உடலுக்கு தேவையான தண்ணீர் சத்து கிடைக்கும்.
மேலும் அதிக உடல் பருமன் உள்ளவர்கள் கூடுதலாக தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் தண்ணீர் சத்து உள்ள வெள்ளரிக்காய், தர்பூசணி பழம், ஸ்டாபெரி ஆகியவற்றை நாம் சாப்பிடலாம்.