தண்ணீர் அதிகம் குடிப்பதால், எப்போதும் நன்மைதான் உண்டாகும். இந்நிலையில் நமது உடல் இயக்கத்திற்கும் , சருமம் பொலிவாக காட்சியளிக்கவும் நாம் குடிக்கும் தண்ணீர் உதவுகிறது.
ஆனால் நாம் குடிக்கும் சாதாரண தண்ணீர் உடல் வரட்சியை கட்டுப்படுத்த உதவாது என்று கூறப்படுகிறது. மேலும் நாம் அதிகம் தண்ணீர் குடிக்கும்போது, அது நமது உடலை விட்டு வெளியே செல்லும். இந்நிலையில் எலக்ட்ரோலைட்ஸ் அளவு மீண்டும் நிரப்பபடவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில் நாம் எலக்ட்ரோலைட்ஸ் என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

எலக்ட்ரோலைட்ஸ்?
எலக்ட்ரோலைட்ஸ் என்பது பொட்டாஷியம், கால்சியம், மெக்னீஷியம் உள்ளிட்ட மினரல்ஸை கொண்டது. இந்நிலையில் இந்த எலக்ட்ரோலைட்ஸ் நாம் சாப்பிடும் உணவு மற்றும் பானங்களிலிருந்து கிடைக்கிறது. இந்நிலையில் இந்த எலக்ட்ரோலைட் முக்கிய செயல்பாடுகளை நமது உடலில் செய்கிறது. உடலில் உள்ள சத்துக்களை எல்லா செல்களுக்கும் எடுத்துச் செல்கிறது. மேலும் செல்களிலிருந்து கழிவை எடுத்துக்கொண்டு செல்வது, சேதமான சதைகள் மீண்டும் வளர்ச்சியடைவது, உடலில் உள்ள பி.எச் (PH) அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. நரம்புகள், தசைகள், இதயம், மூளை ஆகியவை சீராக செயல்பட உதவுகிறது.
இந்நிலையில் நாம் குடிக்கும் தண்ணீரில், எலக்ட்ரோலைட் இருப்பது குறைவு. நாம் பல்வேறு வகையில் தண்ணீரை சுத்திகரித்துதான் பருகுகிறோம். இந்நிலையில் நாம் உடல் பயிற்சி செய்தால், அல்லது வயிற்றுப் போக்கு , காய்ச்சல் நேரத்தில் எலக்ட்ரோலைட்ஸ் இழப்பு ஏற்படும்.
இந்நிலையில் நாம் சிறுநீர் கழிக்கும்போது, இந்த எலக்ட்ரோலைட் ஒவ்வொரு முறையும் குறையும். இந்நிலையில் மலைகள், கிணறு அல்லது பூமி ஊற்றில் கிடைக்கும் தண்ணீரில்தான் கால்சியம், மெக்னீஷியம், க்ளோரைட் இருக்கிறது. ஆனால் இந்த தண்ணீர் நமக்கு கிடைப்பது மிகவும் அரிது.
தண்ணீரில் எப்படி எலக்ட்ரோலைட்ஸை சேர்ப்பது
இந்நிலையில் நாம் குடிக்கும் தண்ணீரில், கடல் உப்பை சேர்க்க வேண்டும். அல்லது தண்ணீரில் இஞ்சி, தண்ணீர் பூசணி போட்டு குடிக்கலாம்.
தேங்காய் தண்ணீரில் எலக்ட்ரோலைட் அதிகமாகவே இருக்கிறது.
எலக்ட்ரோலைட் தண்ணீர் செய்முறை :
அரை கப் ஆரஞ்சு ஜூஸ், 2 கப் தண்ணீர், ¼ கப் எலுமிச்சை சாறு, உப்பு, தேவைப்பட்டால் தேன் சேர்த்துகொள்ளலாம். இதை நாம் குடித்தால், நமக்கு தேவையான எலக்ட்ரோலைட் கிடைக்கும்,