வெயில் காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவது மிக சாதரண ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் வெயில் காலத்தில் ஏற்படும் நீர் சத்து குறைபாட்டால் கூட மலச்சிக்கல் ஏற்படலாம். இந்நிலையில் மலச்சிக்கலுக்கு நிவாரணம் கொடுக்க இந்த 3 பானத்தை நீங்கள் வீட்டில் செய்து குடிக்கலாம்.
பெருஞ்சீரக டீ:
இதில் நார்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கலை குணப்படுத்தும். நமது கழிவான மலத்தை மிரதுவாக்குகிறது, இதனால் மலச்சிக்கல் ஏற்படாது. ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகத்தை எடுத்து சேர்க்க வேண்டும். தொடர்ந்து, அதை தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். அளவில் பாதி ஆனதும் வடிகட்டி குடிக்க வேண்டும்.
கிவி- புதினா பானம் :
தண்ணீர் மற்றும் சர்க்கரையை நன்றாக சேர்த்து கொதிக்க வைக்கவும். தொடர்ந்து அடுப்பை அணைத்த பிறகு அதில் புதினாவை சேர்க்கவும். சூடு போனதும் அதில் கிவி பழங்களை நறுக்கி எடுத்த சாறை அதில் சேர்க்கவும் தொடர்ந்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். தொடர்ந்து அதை எடுத்து எலுமிச்சை சாறுடன் கலந்து அதில், ஐஸ் சேர்த்து குடித்தால் மலச்சிக்கல் நீங்கும்.
கருப்பு திராட்சை தண்ணீர் :
8 முதல் 10 கருப்பு திராட்சையை தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும். தொடர்ந்து அடுத்த நாள், இந்த தண்ணீரை குடிக்க வேண்டும். இது வயிற்றை சுத்தப்படுத்தி, மலச்சிக்கலுக்கு தீர்வாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil