பிரபல சித்த மருத்துவர் சிவராமன் பாரம்பரிய உணவு மற்றும் அதன் நன்மைகளை பற்றி கூறி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் பலரும் கூறுவது போல் கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவது மற்றும் அதன் உடல் நன்மைகளை கூறியுள்ளார்.
Advertisment
அவர் பேசுகையில், "இப்போது பலரும் குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை சாப்பிட ஆரம்பித்துள்ளார்கள். அதே போல் புற்று நோயாளிகளுக்கு இந்த அரிசியை எடுத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொருவரின் வீட்டிலும் தினமும் ஒரு பிடி கருப்பு கவுனி அரிசி சாப்பிட வேண்டும்.
சீனாவில் இந்த அரிசி தடை செய்யப்பட்டிருந்தது. காரணம் ஆச்சரியத்தை அளித்ததது. இது மன்னர்கள், செல்வாக்கு மிக்கவர்கள் மட்டும் சாப்பிட கூடிய உணவு. சாதாரண மக்கள் சாப்பிடக் கூடாது என அந்தக் காலத்தில் திபெத்தியர்கள் தடை செய்திருந்தனர். ஆய்வின்படி இந்தியாவில் உள்ள 1,65,000 அரிசி இனங்களில் மிகச் சிறந்த மருத்துவ குணம் கருப்பு கவுனி அரிசியில் மட்டுமே உள்ளது.
அந்த அரிசியில் உள்ள கருப்பு நிறத்தில் ஆந்தோ சைனின் சத்து உள்ளது, இது இன்பிலேமேசன் உள்பட புற்றுநோயில் ஏற்படும் அலட்சி வரை தடுக்கும். தினமும் கருப்பு கவுனி சாப்பிடும் போது புற்றுநோய் வருவதை நிச்சயம் தடுக்க முடியும்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“