முருங்கைப்பூவில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. முருங்கைப்பூவில் பல ரெசிபிகள் செய்யலாம். இங்கு சுவையான தயிர் பச்சடி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முருங்கைப்பூ – 1 கப்
தயிர் – அரை கப்
தேங்காய்துருவல் – அரை கப்
சீரகம் – 1 ஸ்பூன்
பச்சைமிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் – 1 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
பெருங்காயம் – ¼ ஸ்பூன்
கறிவேப்பிலை – 4
செய்முறை
முதலில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, முருங்கை பூ போட்டு சிறிது உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பூ வெந்ததும் மிக்ஸியில் அரைத்த விழுதை போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அடுப்பை அணைத்து ஆறவிடவும். இப்போது ஒரு பாத்திரத்தில் தயிர் ஊற்றி அதில் இந்த கலவையை சேர்த்து தேவைப்பட்டால் உப்பு சேர்த்து பரிமாறவும். அவ்வளவு தான் சுவையான, ஆரோக்கியமான முருங்கைப்பூ தயிர் பச்சடி தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“