முருங்கைக்காயில் சத்துக்கள் நிறைந்துள்ளன. முருங்கையில் பல ரெசிபி செய்யலாம். முருங்கை கீரையில் இரும்புத் சத்து உள்ளது. முருங்கை சூப் செய்து குடிக்கலாம். முருங்கைகாய் கொண்டு சாம்பார் செய்யலாம். முருங்கை பூ கொண்டு பொறியல் செய்யலாம். முருங்கையின் அனைத்து பாகங்களும் உண்ணக் கூடியது. முருங்கைக்காய் உடல் நலத்திற்கு உகந்தது. இந்த முருங்கைக்காய் கொண்டு வடை கூட செய்யலாமாம். கோலா உருண்டையாகவும் செய்யலாம். எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முருங்கைக்காய் – 2
கடலைப் பருப்பு- ½ கப்
வரமிளகாய் – 5
துருவிய தேங்காய் – ¼ கப்
சோம்பு – ½ ஸ்பூன்
சீரகம் – ¼ ஸ்பூன்
பட்டை – சிறிதளவு
வர மல்லி – ½ ஸ்பூன்
இஞ்சி – சிறிதளவு
பூண்டு – 3 பல்
மிளகாய் தூள் – தேவையான அளவு
கரம் மசாலா – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு.
செய்முறை
முதலில் கடலைப் பருப்பை 3 மணிநேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். முருங்கைக்காயை வேகவைக்க வேண்டும். இப்போது ஒரு கடாயில் பட்டை, சோம்பு, வரமிளகாய், மல்லி, சீரகம், சோம்பு அனைத்தையும் மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக, வேக வைத்த முருங்கைக்காயின் சதைப் பகுதியை மட்டும் தனியாக எடுத்து
கொள்ளவும். இப்போது இதனுடன் சின்ன வெங்காயம், தேங்காய், இஞ்சி, பூண்டு, கடலைப் பருப்பு, மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இப்போது இந்த கலவையை சிறிதாக உருண்டை பிடித்துக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி உருண்டையைப் போட்டு எடுத்தால் சுவையான முருங்கைக்காய் கோலா உருண்டை தயார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/