கருவாடு தொக்கு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கருவாடு – 10 துண்டுகள்
பூண்டு – 6 பற்கள்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
பெரிய தக்காளி – 1
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
முதலில் கருவாட்டை சுடுநீரில் போட்டு 30 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் கருவாட்டை சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். தொக்கு செய்ய தேவையான வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பூண்டு ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து வதக்கி வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கருவாடு சேர்த்து கலக்கவும். இந்த மசாலாவுடன் சேர்த்து 5-6 நிமிடம் நன்கு வதக்க விடவும். பிறகு அதில் 1-2 கப் தண்ணீர் ஊற்றி கிளறவும். தண்ணீர் வற்றியதும் இறக்கினால், கமகம கிராமத்து கருவாட்டு தொக்கு ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“