இயற்கையில் கிடைத்திடும் உலர் பழங்களை கொண்டே கண்களின் ஆரோக்கியம், கண் நோய்கள், கண் சார்த்த குறைபாடுகளை எளிதில் சீராக்கிட முடியும் என்று மருத்துவர் கௌதமன் கூறுகிறார்.
உலர் பழங்களில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க போதுமான ஊட்டச்சத்தை எடுக்க வேண்டும். அதனால்தான் காலையில் முடிந்தவரை உலர் பழங்களைச் சாப்பிட வேண்டும். இவற்றின் பயன்களை தெரிந்து கொள்வோம்.
- பாதாம் கண் தொற்று நோய் வராமல் பாதுகாக்கின்றது.
- அக்ரூட் கண் நரம்பை பலப்படுத்திட செய்கின்றது.
- முந்திரி கண் நரம்புகள் சீராக வேலை செய்து, விழித்திரையில் ஒளி கற்றைகள் படும்போது ஏற்படும் பாதிப்பை தடுக்கின்றது.
- பிஸ்தா பருப்புகள் கண் சோர்வு( Lazy eyes ) நோய் ஏற்படுவதிலிருந்தும் பாதுகாக்கின்றது.
- உலர்ந்த திராட்சை கண்களுக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராகி கண் பார்வையை மேம்பட செய்கின்றது.
- ஆப்ரிகாட் அதிக நேரம் கண்கள் அடையும் ஒளியினால் உண்டாகும் சிரமங்களை நீக்குகின்றது.
- அத்திப்பழம் மூளையின் செயல்பாட்டிற்கும், கண்ணில் உண்டாகும் சிரமங்களுக்கும் நிவாரணம் அளிக்கின்றது.
- சூரிய காந்தி விதைகள், பிரேசில் நட்ஸ் கண்களினால் உண்டாகும் சிரமங்களை நீக்கி ஆரோக்கியம் அடைந்திட செய்கின்றது.
கண்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திடும் உலர் பழங்கள் !! Dr.கௌதமன்
உலர் பழங்களில் கனிமங்கள், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. மேலும் காலை நேர சிற்றுண்டிக்கு இது மிகச்சிறந்த ஒன்றாக கூறப்படுகிறது.
தினமும் 10 பாதாம் சாப்பிடுவதால் உடம்பிற்கு தேவையான வைட்டமின் ஈ சத்தானது 50 சதவீதம் கிடைக்கின்றது. நார்ச்சத்து அதிகம் கொண்ட பிஸ்தா பருப்பை எடுத்துக் கொண்டால் இரைப்பை மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்தது ஆகும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.