Advertisment

கேன்சரை தடுக்கும் மருந்து இதில்... தேனுடன் உலர் திராட்சை இப்படி சாப்பிடுங்க: டாக்டர் நித்யா

தேனுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதால் கேன்சர் வராமல் தடுக்க முடியும் என மருத்துவர் நித்யா கூறுகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இம்யூனிட்டி, இரும்புச் சத்து... தினமும் 6 கருப்பு உலர் திராட்சை சாப்பிடுங்க!

உலர் திராட்சை கேன்சர் வராமல் தடுக்குமா? - மருத்துவர் விளக்கம்

உலர் திராட்சை என்பது இனிப்பு சுவை மிகுந்த ஒரு உலர்ந்த பழமாகும். இது பண்டைய காலங்களிலிருந்தே பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, பல ஆராய்ச்சிகள் உலர் திராட்சையில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன. அதை பற்றி இங்கு பார்க்கலாம். 

Advertisment

"உலர் திராட்சையில் இவ்வளவு மருத்துவ குணங்களா? தினமும் இதுபோல் எடுத்துக்கொண்டால் நோயே வராது.." என்ற தலைப்பில் வெளியாகியுள்ள யூடியூப் வீடியோவில் உலர் திராட்சையின் பல நன்மைகள் விளக்கப்பட்டுள்ளன.  

உலர் திராட்சையில் நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை செரிமானத்தை மேம்படுத்தி, இதய ஆரோக்கியத்தைப் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், உலர் திராட்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைத்து, புற்றுநோய் செல்கள் வளர்வதைத் தடுக்கின்றன.

உலர் திராட்சயில் இவ்வளவு மருத்துவ குணங்களா? தினமும் இதுபோல் எடுத்துக்கொண்டால் நோயே வராது..

Advertisment
Advertisement

உலர் திராட்சையை தினமும் சிறிதளவு உட்கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கும். இது எலும்புகளை வலுப்படுத்தி, இரத்த சோகையைத் தடுக்கிறது. மேலும், உடல் எடையை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

உலர் திராட்சை ஒரு சிறந்த இயற்கை உணவாகும். இதை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் பல நோய்களைத் தடுக்கலாம். இருப்பினும், அதிகமாக உட்கொள்வது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, மிதமான அளவில் உட்கொள்வது நல்லது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Cancer Are dry fruits beneficial for health?
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment