மதிய உணவிற்கு என்ன சமைக்கலாம் என்று யோசிப்பதற்கே பெரும் கவலையாக இருக்கும். இதனை போக்கும் விதமாக சுவையான புதினா சாதம் ரெசிபியை இந்தப் பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
புதினா,
கொத்தமல்லி,
கறிவேப்பிலை,
இஞ்சி,
பூண்டு,
எண்ணெய்,
கடுகு,
பிரியாணி இலை,
கல்பாசி,
பட்டை,
சோம்பு,
கிராம்பு,
வெங்காயம்,
பச்சை மிளகாய்,
பட்டாணி,
உப்பு,
தக்காளி,
நெய்.
செய்முறை:
தேவையான அளவிற்கு புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி மற்றும் பூண்டு ஆகிய அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது, அடுப்பில் குக்கர் வைத்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
இதில் கடுகு, பிரியாணி இலை, கல்பாசி, பட்டை, சோம்பு, கிராம்பு மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். இதன் பின்னர், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, ஊறவைத்த பட்டாணி ஆகியவை சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும்.
இதையடுத்து, தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு விழுது, சிறியதாக நறுக்கிய தக்காளி மற்றும் முதலில் அரைத்து வைத்த மசாலா சேர்க்க வேண்டும். இவற்றில் இருந்து பச்சை வாசனை நீங்கிய பின்னர் நெய் சேர்க்கலாம்.
இந்தக் கலவையுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் கொதித்து வரும் போது அரிசி சேர்த்து வேகவைத்து எடுத்தால் சுவையான புதினா சாதம் ரெடியாகி விடும்.