சோம்பேறி டின்னர்: இந்த பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்; ருசியோ ருசி!

சப்பாத்தி அல்லது சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடக் கூடிய சிம்பிளான கிரேவி எவ்வாறு தயாரிக்கலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இது பேச்சிலர்களுக்கு ஏற்ற உணவாக இருக்கும்.

சப்பாத்தி அல்லது சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடக் கூடிய சிம்பிளான கிரேவி எவ்வாறு தயாரிக்கலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இது பேச்சிலர்களுக்கு ஏற்ற உணவாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
Easy dinner

பேச்சிலர்கள் ஈசியாக செய்யும் வகையில் மிகக் குறைவான பொருட்கள் வைத்து இரவு உணவு எவ்வாறு தயாரிக்கலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இதற்கு அதிக செலவு ஆகாது என்பது கூடுதல் சிறப்பு.

Advertisment

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு,
வெங்காயம்,
பச்சை மிளகாய்,
தக்காளி,
குழம்பு மிளகாய் தூள்,
எண்ணெய்,
உப்பு,
பெருங்காயத்தூள்,
கடுகு,
உளுந்து,
கடலை பருப்பு,
சீரகம்,
கறிவேப்பிலை,
புளி,
கொத்தமல்லி

செய்முறை:

Advertisment
Advertisements

பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் துவரம் பருப்பு, பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பூண்டு, சிறிதளவு குழம்பு மிளகாய் தூள், சிறிதளவு எண்ணெய், தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத்தூள் ஆகியவற்றை மூன்று கப் தண்ணீரில் வேக வைக்க வேண்டும். 

இப்போது, அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளலாம். இதில், கடுகு, உளுந்து, கடலை பருப்பு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். இதனை முதலில் தயாரித்து வைத்த மசாலாவில் ஊற்றலாம். இத்துடன் தேவைக்கேற்ப புளியையும் கரைத்து சேர்க்க வேண்டும். இதனை 5 நிமிடங்கள் வேகவைத்து கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும்.

இந்த சுவையான கிரேவியை சப்பாத்தி அல்லது மதியம் வடித்த சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டல் கூடுதல் சுவையாக இருக்கும். மேலும், இதனை செய்வதற்கும் எளிமையாக இருக்கும்.

recipe

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: