தினந்தோறும் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் உற்சாகமாக இருக்க உதவுவது மதிய உணவு தான். இவை டேஸ்டாக இருப்பதுடன் சத்தாக இருப்பதும் அவசியம். அந்த வகையில் சிம்பிளான மற்றும் ஹெல்தியான ஒரு ஸ்பெஷல் சாதம் எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சிவப்பு மிளகாய் - 5,
பச்சை மிளகாய் - 3,
பட்டை - சிறிய துண்டு,
கிராம்பு - 3,
ஏலக்காய்- 3,
கொத்தமல்லி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்,
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்,
வெந்தயம் - கால் டேபிள் ஸ்பூன்,
மிளகு - அரை டேபிள் ஸ்பூன்,
இஞ்சி,
பூண்டு,
தேங்காய்.
செய்முறை:
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, பட்டை, கிராம்பு, கொத்தமல்லி விதைகள், சீரகம், வெந்தயம், மிளகு மற்றும் ஏலக்காய் சேர்த்து வறுக்க வேண்டும்.
இவற்றை வறுக்கும் போது துருவிய தேங்காயையும் சேர்த்துக் கொள்ளலாம். இதையடுத்து வறுத்த மசாலா பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் அரைக்க வேண்டும். இப்போது, அடுப்பில் குக்கர் வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றலாம்.
இதில் பிரியாணி இலை, நறுக்கிய வெங்காயம், ஒரு கப் பட்டாணி குடை மிளகாய், காலிஃபிளவர், தக்காளி, மஞ்சள் தூள் ஆகியவை சேர்த்து வதக்க வேண்டும். இதன் பின்னர், சிறிது கொத்தமல்லி இலைகளுடன் முதலில் அரைத்து வைத்த மசாலா பொருட்களை சேர்க்கவும்.
இதையடுத்து, 15 நிமிடங்கள் சுடுதண்ணீரில் ஊற வைத்த பாஸ்மதி அரிசி, ஒரு கப் கெட்டி தயிரை இவற்றுடன் சேர்க்க வேண்டும். இறுதியாக தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் சுவையான ஒன் பாட் ரைஸ் ரெடியாகி விடும். இதற்கு சைட்டிஷ்ஷாக தயிர் வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.