பேச்சுலர்களுக்கு பெரும் சவாலாக இருப்பது சமையல் தான். ஒவ்வொரு நாளும் என்ன சமைக்கலாம் என்று இல்லத்தரசிகளுக்கு ஏற்படும் அதே குழப்பம் பேச்சுலர்களுக்கும் ஏற்படுவது வழக்கம். அதன்படி, அனைத்து பேச்சுலர்களும் சுலபமாக செய்யும் வகையில் ஒரு சூப்பரான சைட்டிஷ் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்,
கடுகு,
சீரகம்,
பூண்டு,
மிளகாய்த் தூள்,
மஞ்சள் தூள்,
வெங்காயம்,
கேரட்,
பச்சை மிளகாய்,
உப்பு,
எலுமிச்சை சாறு மற்றும்
கொத்தமல்லி இலை.
செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து அதில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். இந்த எண்ணெய் சூடானதும் சிறிதளவு கடுகு, சீரகம், 4 பூண்டு ஆகியவற்றை சேர்த்து வறுக்க வேண்டும். அதன் பின்னர், ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலக்க வேண்டும்.
இதையடுத்து, நறுக்கிய வெங்காயம், கேரட், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கலாம். இதன் பின்னர், அரை டீஸ்பூன் உப்பு, அரை எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலைகள் ஆகியவை சேர்த்து கலக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சுவையான வெங்காய கேரட் தொக்கு தயாராகி விடும்.
இதனை சப்பாத்தி, பூரி, தோசை போன்றவற்றுக்கு சேர்த்து சாப்பிடலாம். சுவையும் அட்டகாசமாக இருக்கும், இதை செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது.