தீபாவளி பண்டிகை வந்தாச்சு. பொதுவாகவே பண்டிகை காலங்களில் புத்தாடை உடுத்தி, வழிபாடு செய்து, இனிப்புகள் சாப்பிடுவது வழக்கம். அதில், தீபாவளி பண்டிகை கூடுதல் ஸ்பெஷலாக இருக்கும். இனிப்புகளை நண்பர்கள், உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்வோம். அந்தவகையில் வீட்டிலேயே இனிப்பு செய்து கொடுப்பது இன்னும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். அதிகம் வேலை இல்லாத ஈஸி அதிரசம் செய்து கொடுங்கள். 3 பொருட்கள் கொண்டு செய்யலாம். ஹெல்தி ஃபுட் கிச்சன் என்ற யூட்யூப் சேனலில் இந்த ரெசிபி பகிரப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி - 1 கப்
- வெல்லம் - 3/4 கப்
- நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை
முன்னதாக, பச்சரிசி வறண்ட மாவு பயன்படுத்த கூடாது. ஈரமான மாவில் செய்ய வேண்டும். வெல்ல பாகு முறுக கூடாது. புது வெல்லம் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அதிரசம் கருப்பாக இருக்கும். இந்த டிப்ஸ் பயன்படுத்தி அதிரசம் செய்யலாம்.
பச்சரிசி மாவு 1 மணி நேரம் ஊறவைத்து, தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். வடிகட்டி பயன்படுத்தி தண்ணீர் எடுக்கலாம். அடுத்து, மிக்ஸியில் அரிசி போட்டு அரைத்துக் கொள்ளவும். மாவு கட்டியில்லாமல் இருக்க வேண்டும். மாவை கட்டியில்லாமல் சல்லடையில் சலித்து எடுத்துக் கொள்ளலாம்.
இப்போது, வெல்ல பாகு தயார் செய்ய வேண்டும். அதற்கு முதலில் கடாயில் வெல்லம் சேர்க்க வேண்டும். அரிசி எடுத்த கப்-பில் 1 கப் தண்ணீர் எடுத்து சேர்க்க வேண்டும். அடுப்பில் வைத்து நன்கு கிளற வேண்டும். பாகு ஓரளவு வந்தவுடன், பதம் பார்க்க வேண்டும். அதற்கு, ஒரு தட்டில் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் இருக்கும் பாவை கொஞ்சமாக எடுத்து, இதில் ஊற்றவும். பாகு தண்ணீருடன் கலக்க கூடாது. இந்த பதத்தில் இருந்தால் அதிரசம் செய்வதற்கான பாகு தயார்.
பாகு தயாரான உடன் லோ-பிளேமில் வைத்து அரைத்து வைத்த பச்சரிசி மாவு சேர்க்க வேண்டும். இப்போது அதிரசம் மாவு தயாராகி விடும். மாவை வேறு பாத்திரத்தில் மாற்றி, சிறிது நெய் சேர்க்கவும். பின், மாவை ஆற விட்டு மூடி வைக்கவும். உடனே செய்யாமல் அடுத்த நாள் அதிரசம் செய்வது டேஸ்டியாக இருக்கும்.
அடுத்த நாள் மாவு கெட்டியாக இருக்கும். இப்போது கையில் நெய் தடவி, முறுக்கு உருட்டும் பதத்திற்கு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அடுத்தாக, அதிரசம் தட்ட வேண்டும். தட்டையாக தட்டி கடாயில் போட்டு சூடாக சுட்டு எடுக்க வேண்டும். அவ்வளவுதான். ஆறவிட்டு எடுத்து சாப்பிடலாம். தீபாவளிக்கு சாஃப்டான அதிரசம் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“