நிறைய இடங்களில் பிரியாணியுடன் சேர்த்து பிரட் அல்வா கொடுப்பார்கள். அதன் சுவை அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக, பிரட் அல்வாவை டேஸ்ட் செய்வதற்காகவே சிலர் பிரியாணி வாங்குவதாக கூறுவதும் உண்டு. அதன்படி, சூப்பரான பிரட் அல்வா ரெசிபியை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பிரட்,
எண்ணெய்,
நெய்,
தண்ணீர்,
சர்க்கரை,
முந்திரி மற்றும்
ஏலக்காய் பொடி
செய்முறை:
ஒரு கிலோ பிரட்டை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். முன்னதாக, இதன் ஓரங்களில் இருப்பதை அகற்றி விடலாம். அதன் பின்னர், இவை அனைத்தையும் பொந்நிறமாக பொறித்து எடுக்க வேண்டும்.
அதன் பின்னர், பொறித்த பிரட்டை தனியாக எடுத்து விடலாம். இப்போது, அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் போதுமான அளவு நெய் ஊற்றிக் கொள்ளலாம். இதில் நமது தேவைக்கு ஏற்ப முந்திரியை வறுக்க வேண்டும்.
இதையடுத்து, முந்திரியை தனியாக எடுத்துக் கொள்ளலாம். இனி, அடுப்பில் உள்ள பாத்திரத்தில் ஒன்றரை லிட்டர் தண்ணீர் ஊற்றி, அதில் இரண்டு கிலோ சர்க்கரை சேர்த்து பாகு தயாரிக்க வேண்டும். இவை கொதிக்கும் போது, பொறித்து வைத்த பிரட்டை இதில் சேர்த்து வதக்கலாம்.
இறுதியாக, பிரட் முழுவதும் அல்வா பதத்திற்கு வந்ததும் வறுத்து வைத்த முந்திரி மற்றும் ஏலக்காய் பொடி தூவி இறக்கலாம். இவ்வாறு செய்தால் சுவையான பிரட் அல்வா தயாராகி விடும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.