பிரெட் அனைவரும் சாப்பிடுவோம். பிரெட் ஆம்லெட், பிரெட் டோஸ்ட் எனப் பல வகையாக செய்து சாப்பிடுவோம். பிரெட் ரெசிபி மிகவும் சுலபமானது. வேலைக்கு செல்பவர்கள் காலையில் பிரெட் சாப்பிட்டு செல்வர். பெரும்பாலானோருக்கு காலை உணவாகவே பிரெட் மாறிவிடுகிறது. அந்தவகையில் காரமாக ஒரு பிரெட் ரெசிபி செய்யலாம். பிரெட் மஞ்சூரியன் செய்யலாம். ஈவ்னிங் சாப்பிடுவதற்கு பொருத்தமான ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி.
தேவையான பொருட்கள்
பிரெட் - 4
பட்டர் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 2
குடைமிளகாய் - 1
பச்சை மிளகாய் - 2
சில்லி சாஸ் - 2 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1/2 கப்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
செய்முறை
பிரெட்டை தவாவில் வைத்து பட்டர் தடவி டோஸ்ட் செய்து கொள்ளவும். பின் அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து கடாயில் எண்ணெய்/ பட்டர் போட்டு வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். அடுத்து அதில், தக்காளி சாஸ், சோயா சாஸ், கொஞ்சம் உப்பு சேர்த்து கலக்கி வதக்கவும். பின், பிரெட் துண்டுகளை அதில் சேர்த்து கொள்ளுங்கள். அப்படியே பிரெட் துண்டுகள் உடையாதவாறு பிரட்டவும். மசாலா அதில் கலக்கும்படி செய்யவும். அவ்வளவு தான், இப்போது அதன் மீது கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். சுடச் சுட பிரெட் மஞ்சூரியன் ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil