வீட்டில் இருக்கக்கூடிய மூன்று பொருட்களை வைத்து ஈஸியான பர்பி செய்யலாம்.இதற்கு நெய், எண்ணெய், பால் எதுவும் தேவை இல்லை. குழந்தைகளுக்கு சத்தாகவும் இருக்கும். டக்குனு 5 நிமிடத்தில் செய்தும் விடலாம்.
தேவையான பொருட்கள்
தேங்காய்
ஏலக்காய்
சர்க்கரை
ரவை
செய்முறை
தேங்காய் எடுத்து அதை மிக்ஸி ஜாரில் போட்டு துருவி எடுத்துக் கொள்ளவும். அதன் பின் உள்ள பிரவுன் நிற தோலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ரவை எடுத்து அதை வறுக்க வேண்டும். ரவையை வறுக்கும்போது அதில் ஏலக்காய் சேர்த்து வறுக்க வேண்டும் நல்ல வாசனையாக இருக்கும். நிறம் மாறாமல் வாசனை வரும் வரை ரவையை வறுக்க வேண்டும்.
வெறும் மூனே பொருளில் சுவையான பர்பி இந்த மாதிரி செஞ்சு பாருங்க|Rava coconut burfi recipe in tamil
பின்னர் அதை மாற்றிவிட்டு அதே பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள தேங்காயை ஒரு 2 நிமிடம் மீடியம் பிளேமில் வறுக்க வேண்டும். அதில் உள்ள ஈரப்பதில் நீங்கினால் போதும்.
ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து வைத்துள்ள ரவை எடுத்து அதை பவுடராகும் வரை அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் தேங்காய் துருவலையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் சர்க்கரை போட்டு அதில் இந்த தேங்காய் ரவையும் சேர்த்து கரைத்து இலகி ஒட்டாமல் அல்வா மாதிரி கிடைக்கும் அதை எடுத்து தட்டில் வைத்து கொள்ளவும். பின்னர் அதற்கு மேல் டூட்டி ப்ரூட்டி, நட்ஸ் போன்றவற்றை சேர்த்து கொள்ளலாம். பின்னர் சூடாக இருக்கும் போதே நமக்கு தேவையான அளவு கட் செய்து வைத்தால் போதும் சுவையான பர்பி ரெடி ஆகிவிடும்.