காலை மற்றும் மாலை நேரத்தில் நாம் எந்த அளவிற்கு டிஃபன் சாப்பிடுகிறோம் என்பது அதற்கு சைட்டிஷ்ஷாக இருக்கும் சட்னியை பொறுத்து அமையும். அதன்படி, சுவையான சட்னியை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பூண்டு,
பெரிய வெங்காயம்,
தக்காளி,
காய்ந்த மிளகாய்,
புளி,
கல் உப்பு,
எண்ணெய்,
கடுகு,
கறிவேப்பிலை.
செய்முறை:
சட்னிக்கு தேவையான அளவிற்கான பூண்டு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய்கள், சிறிய துண்டு புளி, கல் உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது, அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்துக் கொள்ளலாம். இதில் எண்ணெய் ஊற்றி அத்துடன் கடுகு, கறிவேப்பிலை ஆகிய இரண்டையும் தாளித்து சட்னியில் ஊற்ற வேண்டும். இதனை நன்றாக கலந்து கொண்டால் சுவையான சட்னி ரெடியாகி விடும்.
இட்லி, தோசை என அனைத்து டிஃபன் வகைகளுக்கு ஏற்றதாக இந்த சட்னி இருக்கும். மேலும், இதனை சில நிமிடங்களிலேயே செய்து விடலாம் என்பது கூடுதல் சிறப்பு.