ஒவ்வொரு நாளும் மதிய உணவுக்கு என்ன சமைப்பது என்று முடிவு செய்வதே பெரும் சவாலாக இருக்கும். குறிப்பாக, சிம்பிளாக இருக்கக் கூடிய ரெசிபி ஏதாவது இருக்குமா என்று பேச்சுலர்ஸ் எதிர்பார்ப்பார்கள். அவர்களுக்கு ஏற்ற வகையில், சுவையான ஃப்ரைடு ஆனியன் ரைஸ் எவ்வாறு செய்ய வேண்டும் என்று இதில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்,
பெரிய வெங்காயம்,
மிளகாய் தூள்,
மஞ்சள் தூள்,
உப்பு,
கரம் மசாலா மற்றும்
சாதம்.
செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து அதில் நான்கு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். இதில், இரண்டு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். இந்த வெங்காயம் முற்றிலும் பொந்நிறமாக மாறியதும், அதனை தனியாக எடுத்து விடலாம்.
இனி, அதே எண்ணெய்யில் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும். இதன் பின்னர், வறுத்து வைத்த வெங்காயத்தில் பாதியை இதில் சேர்க்கவும். இதையடுத்து, வடித்த சாதத்தையும் இந்தக் கலவையுடன் சேர்க்க வேண்டும்.
இறுதியாக, மீதம் இருக்கும் வெங்காயத்தை இதில் தூவி இறக்கினால், சுவையான ஃப்ரைடு ஆனியன் ரைஸ் தயாராக இருக்கும். இது பேச்சுலர்ஸுக்கு ஏற்ற லஞ்ச் ரெசிபி என்பதால், சுலபமாக செய்யலாம்.