சுவையான மற்றும் லஞ்ச் பாக்ஸ் காலியாகும் அளவிற்கு பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி செய்ய வேண்டுமா? அப்படி என்றால் ஹோம் எண்டர்டெயின்மெட் அண்ட் வ்லாக் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்
கடுகு
சோம்பு
பெரிய வெங்காயம்
மிளகாய் பொடி
மஞ்சள் பொடி
கரம் மசாலா
முட்டை மசாலா
முட்டை
உப்பு
பாஸ்மதி அரிசி
கொத்தமல்லி இலை
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு மற்றும் சோம்பு சேர்த்து பொரிய விடவும்.
நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, கரம் மசாலா மற்றும் சிறிது முட்டை மசாலா சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி, நன்கு கலக்கி உதிரி உதிரியாக வரும் வரை வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். முன்னரே வேகவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து நன்கு கிளறவும்.
மீண்டும் சிறிது கரம் மசாலா, முட்டை மசாலா மற்றும் மிளகாய் பொடி சேர்த்து, ஐந்து நிமிடங்கள் கைவிடாமல் கிளறவும். கடைசியாக, நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் சிறிது நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து கிளறி இறக்கவும்.
இந்த முட்டை சாதம் உதிரியாகவும், வாசனையாகவும் இருக்கும். காரம் குறைவாக வேண்டுமானால் அதற்கேற்ப மிளகாய் பொடி அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.