இனிப்பு வகைகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். விதவிதமான உணவு வகைகள் செய்து சாப்பிட விரும்புவோம். வீட்டிலேயே செய்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. கடைகளில் ராசாயனம், சுவையை கூட்ட சில பொருட்கள் கூட சேர்க்கலாம். ஆனால் வீட்டில் செய்வது நமக்கு ஏற்றபடி தேவையான அளவுகளில் செய்யலாம். இனிப்பு என்பதால் குழந்தைகளுக்கு விரும்பி சாப்பிடுவர். அந்தவகையில் வீட்டில் உள்ள பொருட்கள் கொண்டே ஒரு இனிப்பு செய்யலாம்.
தேவையான பொருட்கள்
முட்டை – 3
பால் – 1 கப்
சர்க்கரை – 1/4 கப்
ஏலக்காய்பொடி – சிறிதளவு
பாதாம், பிஸ்தா – 10 கிராம்
செய்முறை
முதலில் பிஸ்தா, பாதாமை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பாலை நன்றாக காய்ச்சி ஆற வைத்து கொள்ளவும். இப்போது, ஆறவைத்த பாலில் முட்டை சேர்த்து கலக்கவும். அடுத்து அதில் சர்க்கரை சேர்க்கவும். இப்போது அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி அதன்மேல் ஸ்டாண்ட் ஒன்றை வைத்து, பால்,முட்டை சேர்த்த பாத்திரத்தை வைக்கவும். அதில் சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்து வைக்கவும். இட்சி பாத்திரத்தை மூடி 15 நிமிடம் மிதமான தீயில் வைத்து ஆவியில் வேக வைக்கவும். இப்போது பாத்திரத்தை திறந்து பொடியாக நறுக்கிய பிஸ்தா, பாதாமை தூவி 1 மணிநேரம் பிரிட்ஜில் வைக்கவும். பின்னர் எடுத்தால் ஜில்லான மில்க் புட்டிங் ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/