காளான் பலரும் விரும்பி சாப்பிடுவர். காளான் கொண்டு நிறைய ரெசிபி செய்யலாம். காளான் ப்ரை, காளான் பிரியாணி, காளான் சில்லி என பல வகைகளை சாப்பிட்டிருப்போம். அந்தவகையில் காளான் தேங்காய் பால் சூப் எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பட்டன் காளான் 10
தேங்காய் பால் – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 4 பல்
சீரகத்தூள், மிளகுத்தூள் – தலா 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்
கொத்த மல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் காளான், வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் காளான் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும். அடுத்து தேங்காய் பால் சேர்த்துக் கொதிக்க விட்டு கொத்த மல்லித்தழை தூவி இறக்கினால் சூப்பரான காளான் சூப் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“