ஜெயிலர் ரஜினிக்கு பிடித்த புதினா சட்னி... சுவையை கூட்டும் ஒரு துண்டு புளி: ஈஸி ஸ்டெப்ஸ் பாருங்க
சுவையான புதினா சட்னி எப்படி செய்வது என்பதற்கான ஈசியான ரெசிபியை இந்தக் குறிப்பில் காணலாம். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவார்கள்
சுவையான புதினா சட்னி எப்படி செய்வது என்பதற்கான ஈசியான ரெசிபியை இந்தக் குறிப்பில் காணலாம். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவார்கள்
தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என பல வகையான சட்னி இருந்தாலும் புதினா சட்னி என்பது பலருக்கு ஃபேவரட்டாக இருக்கும். ஜெயிலர் திரைப்படத்தின் ஒரு காட்சியில் கூட புதினா சட்னி குறித்து ரஜினிகாந்த் பேசுவது போன்று இருக்கும். அதன்படி, பலருக்கும் பிடித்த புதினா சட்னி எப்படி செய்வது என தற்போது பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
எண்ணெய், கடலை பருப்பு, உளுந்து, சீரகம், சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, கொத்தமல்லி தண்டு, புளி, தேங்காய், கறிவேப்பிலை.
செய்முறை:
Advertisment
Advertisements
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் சிறிதளவு சேர்க்க வேண்டும். இந்த எண்ணெய் சூடாகி வரும் போது ஒரு ஸ்பூன் கடலை பருப்பு, கால் ஸ்பூன் உளுந்து, கால் டீஸ்பூன் சீரகம், ஒரு கப் சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும்.
இவை வதங்கி வரும் போது இரண்டு தக்காளி, 6 பல் பூண்டு, ஒரு பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும். இதன் பின்னர், புதினா, கொத்தமல்லி தண்டு, தேவையான அளவு உப்பும் சேர்க்க வேண்டும். இதில் தக்காளி குழைவாக வந்த பின்னர் சிறிதளவு தேங்காய் மற்றும் கொஞ்சமாக புளி சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும். இறுதியாக இவற்றை அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.
மறுபுறம், சிறிதளவு எண்ணெய்யில் கடுகு, உருட்டு உளுந்து, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். இதில், அரைத்து வைத்திருந்த சட்னியை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இவ்வாறு செய்தால் சுவையான புதினா சட்னி தயாராகி விடும்.