தேவையான பொருட்கள்
பூசணிக்காய் -1/4 கிலோ
உருளைக் கிழங்கு - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
அரிசி மாவு - 2 ஸ்பூன்
சோளமாவு-2 ஸ்பூன்
கறிமசாலாத் தூள் - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
லெமன் ஜூஸ்-1 ஸ்பூன்
பிரெட் க்ரம்ஸ் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் பூசணிக்காயை துருவிக் கொள்ள வேண்டும். உருளைக் கிழங்கை வேக வைத்து மசிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும். இப்போது அடுப்பில் இட்லி தட்டு வைத்து துருவிய பூசணிக்காய் வைத்து சிறிது தண்ணீர் தெளித்து 10 நிமிடங்கள் வேக விடவும். இதை தனியாக எடுத்து மசித்து வைக்கவும். அதோடு மசித்த உருளைக் கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து கலக்கவும்.
பின் அதில் அரிசி மாவு, சோள மாவு, மசாலா தூள், மிளகு தூள், லெமன் ஜூஸ் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை கட்லெட் வடிவில் தட்டிக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு தட்டில் பிரட் க்ரம்ஸ் எடுத்து அதில் இந்த கட்லெட் துண்டுகளை பிரட்டி காய வைக்கவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கட்லெட் போட்டு 2 புறமும் வேகவிட்டு எடுத்தால் சுவையான பூசணிக்காய் கட்லெட் ரெடி.