மாலை வேளைகளில், சுவையான மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டியை தேடுபவர்களுக்கு, இந்த தக்காளி சாட் ஒரு அருமையான தேர்வு. இதை தயாரிக்க அதிக நேரம் தேவையில்லை, மேலும் வீட்டிலுள்ள எளிய பொருட்களைக் கொண்டே செய்துவிடலாம். இதை எப்படி செய்வது என்று மிஸ்டர் இந்தியன் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்ப்போம்.
முதலில், ஒரு கிண்ணத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்க்கவும். அடுத்து, இந்தக் கலவையுடன் எலுமிச்சை சாறு, சாட் மசாலா, சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
இப்போது, மீதமுள்ள தக்காளியை மெல்லிய வட்டங்களாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். நறுக்கிய ஒவ்வொரு தக்காளி வட்டத்தின் மீதும், நீங்கள் தயார் செய்த கலவையை ஒரு ஸ்பூன் அளவு வைத்து பரிமாறவும்.
இப்போது உங்களுக்கு சுவையான மற்றும் சத்தான தக்காளி சாட் தயாராக உள்ளது. இது ஒரு விரைவான சிற்றுண்டியாக இருந்தாலும், இதில் உள்ள காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.