ஐஸ்கிரிம், கூல்டிரிங்ஸ் போன்று ஃபலூடாவும் கோடைகாலத்தில் விரும்பி சாப்பிடக் கூடிய பானமாகும். சுவையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும்.நிறைய உலர் திராட்சைகள் பயன்படுத்துவதால் உடலுக்கு நல்லதும் கூட. அப்படிப்பட்ட சுவையான ஃபலூடா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ரோஸ் சிரப்
சப்ஜா விதைகள்
சேமியா
டோண்ட் மில்க்
ஐஸ்கீரிம்
சப்ஜா விதைகள்
உலர்ந்த திராட்சை
முந்திரி
பாதாம்
செய்முறை
ஒரு டம்ளரில் ரோஸ் சிரப் ஊற்றிக் கொள்ள வேண்டும். அதில் ஊறவைத்த சப்ஜா விதைகள், வேகவைத்த சேமியா, டோன்ட் மில்க் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
அதற்கு மேல் ஐஸ்கீரிம் ஒரு ஸ்கூப், சிறிது சப்ஜா விதைகள், உலர்ந்த திராட்சை, நறுக்கிய முந்திரி மற்றும் பாதாம்களை ஒவ்வொன்றாக சேர்க்க வேண்டும். நமக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு பயன்படுத்தலாம்.
இதில் நிறைய உலர் திராட்சைகள் பயன்படுத்துவதால் இது உடலுக்கு நல்லதும் கூட. சுவையாகவும் இருக்கும். ஈஸியாகவும் செய்து விடலாம்.