/indian-express-tamil/media/media_files/2025/09/11/cooking-hacks-2025-09-11-14-15-15.jpg)
சமையல் என்பது ஒரு கலை. அது வெறும் அடுப்பங்கரை வேலை மட்டுமல்ல, அன்பையும், அக்கறையையும் சேர்த்து பரிமாறுவது. நாம் அன்றாடம் சமைக்கும் உணவில் ஒரு சில எளிய நுட்பங்களைச் சேர்த்தால், அதன் சுவையும், தரமும் பன்மடங்கு அதிகரிக்கும். அத்தகைய சில சமையல் குறிப்புகளை இங்கே காண்போம்.
பால் பாயசம் செய்யும் போது, பாதாம் பருப்பை அரைத்து சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும். அனைத்து பாயச வகைகளுக்கும், ஏலக்காயை சர்க்கரையுடன் சேர்த்து அரைத்து வைத்தால், வாசனை இன்னும் சிறப்பாக இருக்கும். சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது, அரிசியும், பருப்பும் வேகும் நேரத்தில், இரண்டு துண்டு தேங்காய் சேர்த்து வேக வைத்தால், சுவை கூடும்.
தோசை சுடும்போது, மாவில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்தால், தோசைகள் விரைவாகவும், சிவந்தும் வரும். மேலும், ரவா தோசைக்கு இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்துப் பாருங்கள். தோசை நன்கு மொறுமொறுப்பாக இருக்கும். வடை மாவு அரைக்கும்போது, இரண்டு ஸ்பூன் பச்சரிசி மாவு சேர்த்தால் வடை எண்ணெய் குடிக்காமல் மொறுமொறுப்பாக இருக்கும். பூரி செய்யும் மாவில், சிறிது சூடான எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால், பூரி மிருதுவாகவும், உப்பலாகவும் வரும்.
வெங்காயம் நறுக்கும்போது கண்ணில் நீர் வருவதைத் தடுக்க, வெங்காயத்தை சிறிது நேரம் நீரில் ஊறவைத்து நறுக்கலாம். கத்தரிக்காயை நறுக்கியதும், அது கருத்துப் போகாமல் இருக்க, நறுக்கிய துண்டுகளை உப்பு கலந்த நீரில் போட்டு வைப்பது நல்லது.
சாதம் வெந்ததும், ஒரு தேக்கரண்டி நெய் அல்லது எண்ணெய் சேர்த்தால், சாதம் ஒட்டாமல் உதிரியாக இருக்கும். சாம்பார் வைக்கும்போது, அதில் சிறிது வெல்லம் சேர்த்தால், அதன் சுவை கூடும். குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால், ஒரு ஸ்பூன் தேங்காய் பால் அல்லது தயிர் சேர்த்துப் பாருங்கள், காரம் சமன் செய்யப்படும். பருப்பு சமைக்கும்போது, அது விரைவாக வேக, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வேகவைக்கலாம்.
அதேபோல வடை சுடும்போது எண்ணெய் குடிக்கிறது என்று கவலைப்படுபவர்கள் வடை மாவில் அரை கப் சாதத்தை பிசைந்து வடை தயாரித்தால் மிருதுவாக இருக்கும். எண்ணெய்யும் அதிகம் குடிக்காது. மேலும் கொஞ்டம் சாஃப்ட் ஆக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.