ரேஷன் கடை பச்சரிசியில் அப்பளம் செய்யும் முறை குறித்து தற்போது காணலாம். மிக எளிதான முறையில் அதிகமான அப்பளங்கள் இதில் செய்ய முடியும்.
இதற்கு தேவையான பொருள்கள்:
ஒரு கப் ரேஷன் பச்சரிசி,
ஒரு ஸ்பூன் கல் உப்பு,
ஒரு ஸ்பூன் சீரகம்,
ஒரு ஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்,
கால் டீஸ்பூன் பெருங்காய தூள்,
தேவையான அளவு தண்ணீர்
அப்பளம் செய்யும் முறை:
ரேஷன் பச்சரிசியை நன்றாக கழுவ வேண்டும். அதன்பின்னர், தண்ணீரில் சுமார் 3 மணி நேரம் அரிசியை ஊற வைக்க வேண்டும். அரிசி ஊறியதும் மிக்ஸியில் ஒரு ஸ்பூன் கல் உப்பு போட்டு, தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். அரிசியை அரைத்து எடுத்ததும் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ், கால் டீஸ்பூன் பெருங்காய தூள் சேர்த்து ஆப்ப மாவு பக்குவத்திற்கு கலக்க வேண்டும். இதன் பின்னர், ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். அந்த பாத்திரத்தின் மேல் பகுதியில் சுத்தமான வெள்ளைத்துணி கொண்டு கட்ட வேண்டும். பின்னர், அடுப்பை ஆன் செய்து அந்த வெள்ளைத்துணியின் மீது ஒரு கப் மாவு ஊற்றி, அதன் மீது ஒரு மூடி வைத்து மூட வேண்டும். இரண்டு விநாடிகளில் இந்த மாவு வெந்து விடும். இதேபோன்று மாவு முழுவதையும் ஊற்றி வேக வைத்து எடுக்க வேண்டும். இதையடுத்து, அனைத்து அப்பளத்தையும் ஃபேன் காற்றில் இரண்டு நாள்கள் காய வைத்து எடுக்கலாம். வெயிலில் 1 நாள் காய வைத்தாலே அப்பளம் காய்ந்து விடும். பின்னர், இந்த அப்பளத்தை தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“