காலையில் இட்லி, தோசை செய்து வீட்டில் இருப்பவர்களை போர் அடிக்காதீர்கள். இனியாவது கொஞ்சம் சுவையான டேஸ்டியான பாஸ்தா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பாஸ்தா
உப்பு
எண்ணெய்
பூண்டு
இஞ்சி
வெங்காயம்
தக்காளி
கேரட்
குடை மிளகாய்
கரம் மசாலா
மிளகாய்த்தூள்
கொத்தமல்லி
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் தண்ணீரை சுட வைத்து அது நன்றாக கொதித்ததும் உப்பு சேர்த்து அதனுடன் பாஸ்தா சேர்த்து 10 நிமிடம் வரை வேக வைக்கவும். பிறகு அதனை தனியாக எடுத்து வடிகட்டி எடுத்து வைத்து கொள்ளவும். எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வரும்.
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் நசுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து கூடவே வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
பிறகு வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். பிறகு அதனுடன் கேரட் மற்றும் குடைமிளகாய் சேர்த்து மூடி நன்றாக வேகவைத்து கொள்ளவும்.
இவையனைத்தும் நன்றாக வதங்கியதும் அதனுடன் கரம் மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து அதனுடன் நாம் வேகவைத்த பாஸ்தா சேர்த்து கிளறி 5 நிமிடம் வேக வைத்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான பாஸ்தா தயாராகிவிடும்.