பஞ்சு மாதிரி சாஃப்ட் இட்லி... ஒண்ணா ஊற வச்சு; இப்படி அரைத்து சுட்டுப் பாருங்க!
பஞ்சு மாதிரி மிருதுவான இட்லியை எவ்வாறு சுலபமாக செய்யலாம் என்று இந்தக் குறிப்பில் காணலாம். இதனை செய்வது மிகவும் எளிதாக இருப்பதால், எல்லோராலும் சுலபமாக செய்ய முடியும்.
பஞ்சு மாதிரி மிருதுவான இட்லியை எவ்வாறு சுலபமாக செய்யலாம் என்று இந்தக் குறிப்பில் காணலாம். இதனை செய்வது மிகவும் எளிதாக இருப்பதால், எல்லோராலும் சுலபமாக செய்ய முடியும்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளில் இட்லிக்கு ஒரு தனி இடம் உண்டு. காலை உணவாகவும், இரவு உணவாகவும் இட்லியை எடுத்துக் கொள்ள பெரும்பாலானவர்கள் விரும்புகின்றனர். அந்த வகையில், மிருதுவான இட்லியை எப்படி செய்வது என்று நித்தி’ஸ் லைஃப்லென்ஸ் யூடியூப் சேனலில் குறிப்பிட்டுள்ளனர். அதனை இப்பதிவில் பார்க்கலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம், தண்ணீர் மற்றும் உப்பு.
செய்முறை:
Advertisment
Advertisements
முதலில் 6 கப் இட்லி அரிசியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதே அளவில் உளுத்தம் பருப்பு 2 கப், வெந்தயம் 3 ஸ்பூன் எடுத்துக் கொள்ளலாம். இவை அனைத்தையும் கழுவி விட்டு ஒன்றாக கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதையடுத்து, இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து சுமார் 6 முதல் 7 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர், இவை அனைத்தையும் சேர்த்து கிரைண்டரில் கொஞ்சம் கொஞ்சமாக அரைக்க வேண்டும். இவ்வாறு அரைக்கும் போது தேவையான அளவு தண்ணீர் சேர்க்கலாம்.
இவ்வாறு சுமார் 25 நிமிடங்களுக்கு மாவை அரைத்து எடுத்தால் சாஃப்டான இட்லி பதத்திற்கு மிகச் சரியாக இருக்கும். அந்த வகையில், மாவை அரைத்த பின்னர் இரண்டு கைப்பிடி அளவிற்கு கல் உப்பு சேர்க்க வேண்டும்.
இந்த மாவு சரியாக 8 மணி நேரத்தில் புளித்து இருக்கும். அதன் பின்னர், எடுத்து இட்லி சுட்டால் சாஃப்டான இட்லி கிடைக்கும். இந்த டிப்ஸை ஃபாலோ செய்து உங்களுடைய வீட்டில் இட்லி சுட்டு பாருங்கள்.