ஒவ்வொரு முறையும் சப்பாத்தி சாப்பிட ஆசைபட்டு கை வலிக்க சப்பாத்தி இனி பிசைய தேவையில்லை. இந்த சிம்பிள் ட்ரிக்ஸ் யூஸ் பண்ணாலே போதும் சப்பாத்தி ஈஸியா செய்து விடலாம்
தேவையான பொருட்கள்
மைதா - 50 கிராம்
கோதுமை மாவு - 250 கிராம்
உப்பு
சர்க்கரை
மைதா சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் வெறும் கோதுமை மாவை வைத்தே சப்பாத்தி செய்யலாம்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு கோதுமை மாவு சிறிதளவு மைதா மாவு, உப்பு, சர்க்கரை சேர்த்து ஒரு விஸ்க் வைத்து நன்கு கலந்து கொள்ளவும். குறிப்பாக கட்டி விழாமல் கலந்து கொள்ள வேண்டும்.
கட்டி இல்லாமல் கலந்தால் தான் சப்பாத்தி கிழியாமல் வரும். இந்த மாவை தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ள வேண்டும். பின்பு தோசை கல்லில் இந்த மாவை ஊற்றி அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து வேக வைக்க வேண்டும்.
இதை சப்பாத்தி வடிவில் நமக்கு தேவையான அளவில் ஊற்றிக் கொள்ளலாம். பின்னர் இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு வேக வைக்க வேண்டும். கரண்டியை வைத்து லேசாக திருப்பி எடுத்தால் இரண்டு பக்கமும் வெந்து விடும்.
கரண்டியை வைத்து மேலே தடவி விட்டு எடுத்தால் சப்பாத்தி போல மிருதுவாக தோசையிலேயே சுட்டுவிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“